பட்ஜெட்டுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்பது உண்மையா?

பட்ஜெட் 2021 நமது எரிபொருள் விலைகளை அதிகரிக்குமா என்ற கேள்வி சாதாரண மக்களின் மனதில் எழுந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (Agriculture Infrastructure and Development Cess (AIDC)) விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். 

2021 பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை இப்போது உயருமா?  இது சாமானியர்களின் அன்றாட செலவினங்களை அதிகரிக்குமா? 2021 பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை இப்போது உயருமா? என்ற பல கேள்விகளை எழுப்புகின்றன.

AIDC லிட்டருக்கு ரூ .2.5 மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ .4 விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக  பார்க்கும்போது நுகர்வோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்த அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது  என்று நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் முக்கிய அறிவிப்புகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

Also Read | Budget 2021: வருமான வரி slabs பற்றி நிதியமைச்சர் ஏன் எதுவும் அறிவிக்கவில்லை?

1 /7

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தலா ஒரு எரிவாயு குழாய் திட்டம் மேற்கொள்ளப்படும்.

2 /7

அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 100 மாவட்டங்கள் நகர எரிவாயு விநியோக வலையமைப்பில் சேர்க்கப்படும்

3 /7

8 கோடி வீடுகளுக்கு பயனளித்த உஜ்வாலா திட்டம் மேலும் 1 கோடி பயனாளிகளுக்கு விரிவாக்கப்படும்.

4 /7

பாகுபாடற்ற திறந்த அணுகல் அடிப்படையில் அனைத்து இயற்கை எரிவாயு குழாய்களில் பொதுவான கேரியர் திறனை முன்பதிவு செய்வதற்கான வசதி மற்றும் ஒருங்கிணைப்புக்கு ஒரு சுயாதீன எரிவாயு போக்குவரத்து அமைப்பு (independent Gas Transport System Operator) அமைக்கப்படும்.

5 /7

பட்ஜெட்டினால் பங்கு சந்தை மகிழ்ச்சி அடைந்திருக்கிறது

6 /7

ஒட்டுமொத்தமாக  பார்க்கும்போது நுகர்வோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்த அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது  என்று நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

7 /7

பட்ஜெட் 2021 நமது எரிபொருள் விலைகளை அதிகரிக்குமா என்ற கேள்வி சாதாரண மக்களின் மனதில் எழுந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீது வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு செஸ் (Agriculture Infrastructure and Development Cess (AIDC)) விதிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.