வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய பான் கார்ட் கட்டாயம்?

வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்ட் வரி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பண பரிவர்த்தனைகளுக்கும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

 

1 /6

இந்தியாவில் வங்கிகள் தொடர்பான விதிமுறைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். தற்போது டிஜிட்டல் யுகத்தில் நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெறுகிறது.  

2 /6

பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது. நிதி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் பான் எண் கட்டாயம் ஆகும்.   

3 /6

பான் எண் தனி நபருக்கும், ஒரு நிறுவனத்தின் பெயரிலும் பெற்று கொள்ள முடியும். இது வரி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.  

4 /6

வங்கியில் ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் பணமாக டெபாசிட் செய்ய பான் எண்ணை கண்டிப்பாக வழங்க வேண்டும். மேலும் ஒரு நிதியாண்டில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்தாலும் பால் கட்டாயம் தேவை.   

5 /6

ஒரு நிதியாண்டில் வங்கி கணக்குகளில் ரூ. 20 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ முறையான ஆவணங்களை கொடுக்க வேண்டும்.   

6 /6

தற்போது எந்த ஒரு வங்கி அல்லது தபால் கணக்கை திறந்தாலும் அதற்கு பான் எண்னை கட்டாயம் வழங்க வேண்டும். பான் இல்லாத பட்சத்தில் அப்ளை செய்து சமர்ப்பிக்க வேண்டும்.