ரிஷபத்தில் இணையும் சூரியன் குரு... இந்த ராசிகளுக்கு அளவில்லா அதிர்ஷ்டம்!

சூரியனும் குரு பகவானும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார்கள். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அளவில்லாமல் கிடைக்கும்., அவர்கள் வேலையில், தொழிலில் முன்னேற்றத்துடன் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியன் மற்றும் குரு ரிஷபத்தில் இணைகிறார்கள். குரு பகவானும் மற்றும் கிரகங்களின் ராஜாவான சூரியனின் இணைவினால் பயனடையும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

1 /7

குரு பெயர்ச்சி:  2024 மே மாதம் 1ம் தேதி, குரு பகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷபத்தில் பெயர்ச்சியாகியுள்ளார்.   திருமணம், செல்வம், வேலை மற்றும் தொழில் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் குரு பகவான் மே 14, 2025 வரை ரிஷப ராசியில் இருப்பார்.

2 /7

சூரியன் பெயர்ச்சி: கிரகங்களின் ராஜாவான சூரியன், ஒரு மாதத்திற்கு ஒருமுறை, தான் இருக்கும் ராசியை மாற்றிக் கொள்வார். அந்த வகையில், மே 14 ஆம் தேதி வைகாசி மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். ஏற்கனவே குரு ரிஷபத்தில் இருக்கும் நிலையில் இரு கிரகங்களும் இணைய இருக்கின்றன.

3 /7

குரு - சூரியன் சேர்க்கை: ஜோதிடத்தின் படி, இந்த இரண்டு கிரகங்களுக்கும் இடையே நட்பு உணர்வு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்கள் தொடங்கலாம். மேலும், இவர்களின் செல்வ வளம் கூடும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்...

4 /7

சூரியன் மற்றும் குரு பகவான் இணைவது ரிஷப ராசிகளுக்கு நன்மை பயக்கும்.  உங்கள் ஆளுமை மேம்படும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணம், வணிகம், சொத்து மற்றும் குடும்ப விஷயங்களில் நன்மைகளைப் பெறுவீர்கள். தொழில் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் உங்களுக்கு வெற்றியைத் தரும். திருமணமானவர்களின் மண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். 

5 /7

சிம்மம்: சூரியன் மற்றும் குரு பகவான் இணைவது சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் பெரும் வெற்றியைப் பெறலாம். மேலும், எந்தவொரு பெரிய முதலீடும் உங்களுக்கு மிகவும் வருமானத்தை கொடுப்பதாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வணிக வர்க்கம் நல்ல நிதி லாபம் பெற முடியும். மேலும் உங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம்.

6 /7

கன்னி: சூரியன் மற்றும் குரு பகவான் சேர்க்கை கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். மேலும், உங்கள் நிலுவையில் உள்ள வேலைகளும் நிறைவடையும். இந்த ராசி மாணவர்கள் கல்வி போட்டியில் வெற்றி பெறுவார்கள். அதே சமயம் வெளியூர் செல்ல முயற்சிப்பவர்களுக்கு இக்காலத்தில் விருப்பங்கள் நிறைவேறும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் மூதாதையர் சொத்துக்களைப் பெறலாம்.

7 /7

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.