Kidney Stone Cure:சிறுநீரக கல் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இது சிறுநீரகம் அல்லது சிறுநீர் பாதை என்று எங்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, தண்ணீர் குறைவாக உட்கொள்ளுதல், சிறுநீரில் உள்ள ரசாயனங்களின் அளவு அதிகரிப்பு, உடலில் தாதுப் பற்றாக்குறை, நீர்ச்சத்து குறைபாடு, வைட்டமின் டி அதிகமாக உட்கொள்வது, ஜங்க் ஃபுட்களை அதிகமாக உட்கொள்வது எனப் பல காரணங்கள் உள்ளன. சிறுநீரகக் கல்லின் அளவு 5 மி.மீ.க்கு குறைவாக இருந்தால், அது சிறுநீர் வழியாக உடலில் இருந்து எளிதாக வெளியேறும்.
கல்லின் அளவு 5 மி.மீ.க்கு மேல் இருந்தால், சிறுநீர் பாதையில் அடைப்பை ஏற்படுத்தி, அதனால் முதுகுவலி, வாந்தி போன்ற பிரச்னைகள் அதிகமாகும். சரியான உணவை உட்கொண்டால் சிறுநீரகக் கல்லை எளிதில் குணப்படுத்தலாம். சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். அப்படிப்பட்ட சில உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கல் பிரச்சனையை தவிர்க்கலாம்.
துளசியை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் துளசியை சாப்பிட வேண்டும். தினமும் 5-10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். துளசியில் உள்ள அசிட்டிக் அமிலம் மற்றும் பல வகையான அத்தியாவசிய எண்ணெய்கள் கல்லை உடைத்து சிறுநீர் வழியாக உடலில் இருந்து வெளியேறுகிறது. துளசி வலியைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மாதுளம் பழச்சாற்றை தினமும் உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்களை தவிர்க்கலாம். மாதுளையில் உள்ள பொட்டாசியம் கல் உருவாவதற்கு வழிவகுக்கும் தாது படிகங்கள் உருவாவதை தடுக்கிறது. மாதுளையில் உள்ள காரத்தன்மை கற்கள் உருவாவதை தடுக்கிறது. இதனை உட்கொள்வதால் சிறுநீரில் அமில அளவு சரியாக இருக்கும். சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை சாற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிறுநீரக கல் இருந்தால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது மிக அவசியமாகும். தினமும் அதிக தண்ணீர் உட்கொள்வது சிறுநீரக கற்களின் வலி மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அதிக தண்ணீரை உட்கொள்வதன் மூலம், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நிலை வராது. அவை எளிதாக வெளியேறிவிடும்.
பேரீச்சம்பழங்களை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்களை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்த பேரீச்சம்பழத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால், சிறுநீரக கற்கள் நீங்கும்.
வெள்ளரிக்காயை உட்கொள்வதன் மூலம், உடலில் நீர்ச்சத்து இருக்கும். மேலும் தண்ணீர் பற்றாக்குறையை இது பூர்த்தி செய்கிறது. சிறுநீரக கற்கள் உடையவர்கள் வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிட வேண்டும். கல்லின் அளவு 5 மிமீக்கு குறைவாக இருந்தால், இதை உட்கொள்வதன் மூலம், சிறுநீர் வழியாக எளிதாக அகற்றலாம். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)