இவருக்கு ஜடேஜாவையே ஒப்பனிங் இறக்கலாம்; செம கடுப்பில் ரசிகர்கள்

ஜடேஜா வைத்திருக்கும் டெஸ்ட் ஆவரேஜ் கூட இல்லை என கே.எல்.ராகுலை ரசிகர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

 

1 /4

வங்கதேசம் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை.  இந்திய அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் என மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடும் ராகுல் சராசரி ரன்கள் மிக குறைவாகவே இருக்கின்றன.

2 /4

டெஸ்ட் பொறுத்தவரை 44 போட்டிகளில் விளையாடி ஜடேஜா வைத்திருக்கும் சராசரி ரன்களைக் கூட வைத்திருக்கவில்லை. இதனால் கடுப்பாகி இருக்கும் ரசிகர்கள், இவருக்கு பதிலாக வேறொரு இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளனர்.  

3 /4

ஏற்கனவே ராகுலுக்கு 31 வயதாகிவிட்டதால், அவர் இனிமேல் இந்திய அணியின் எதிர்காலம் என்றெல்லாம் நினைக்காமல் இளம் வீரர் ஒருவருக்கு முறையான வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.  

4 /4

ஆடிக்கு ஒரு அரைசதம், சதம் விளாசும் அவரை அணியில் வைத்துக் கொண்டு இந்திய அணி தன்னை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.