சனியின் மிகப்பெரிய நிகழ்வு, இந்த ராசிகளுக்கு பொற்கால நல்ல காலம் ஆரம்பம்

Shani Retrograde Horoscope 2024 : நீதியின் கடவுளான சனி, அடுத்த மாதம் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். கும்பத்தில் சனியின் வக்ர பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்.

Shani Retrograde June 2024 : சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு அடிப்படையில் சுப மற்றும் அசுப பலன்களைத் தருவார். அதன்படி வரும் ஜூன் 30, 2024 அன்று நள்ளிரவு 12:35 மணிக்கு, சனி பகவான் கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்து நவம்பர் 15 வரை அதாவது மொத்தம் 139 நாட்கள் இதே நிலையில் இருப்பார். இதனால் 12 ராசிகளுக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். சனியின் வக்ர பெயர்ச்சி 12 ராசிகளுக்கு என்ன பலனைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்...

1 /13

மேஷம்: கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். இந்த காலகட்டத்தில், நல்ல பலனைத் தராது. கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலில் வெற்றி பெற புதிய யுக்தியை உருவாக்குங்கள். வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். நிதி இழப்பு ஏற்படலாம். வேலை மாறுவதில் தாமதம் ஏற்படும்.

2 /13

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி தெரியாத பயம் தொந்தரவைத் தரும். வேலையில் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பான முடிவுகளை மிகவும் கவனமாக எடுங்கள். புதிய பொறுப்புகளை விட்டு ஓடாதீர்கள். உங்கள் தொழிலில் கவனம் செலுத்துங்கள். பண விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

3 /13

மிதுனம்: சனியின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பிரச்னைகள் அதிகரிக்கும். வாழ்க்கையில் பல பெரிய மாற்றங்கள் ஏற்படும். பணம் தொடர்பான பிரச்சனைகள் நீடிக்கும். அதிகப்படியான செலவுகளால் மனம் கலங்கும். புதிய நிதித் திட்டத்தை உருவாக்குங்கள்.

4 /13

கடகம்: உங்கள் வியாபாரத்தை மேம்படுத்த புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். புதிய மாற்றங்களை வரவேற்க தயாராக இருங்கள். இந்த நேரத்தில், புதிய முதலீட்டு வாய்ப்புகள் மீது ஒரு கண் வைத்திருங்கள். திடீரென்று அதிகரிக்கும் செலவுகளைக் கவனியுங்கள். பண விஷயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

5 /13

சிம்மம்: தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சமநிலையை பேணுங்கள். பொருளாதார விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வேலையில் தாமதம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் தடைகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் அனைத்து பணிகளையும் மிகுந்த கவனத்துடன் கையாளவும். பொருளாதார விஷயங்களில் நிலையற்ற தன்மை இருக்கும்.

6 /13

கன்னி: சனியின் வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அலைச்சல்களை ஏற்படுத்தும். தொழில் வாழ்க்கையில் புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருங்கள். வேலையில் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் நல்லுறவைப் பேணுங்கள்.

7 /13

துலாம்: சனியின் வக்ர பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் பெறுவீர்கள். அலுவலகத்தில் புதிய திட்டத்திற்கான பொறுப்பு கிடைக்கும். யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். நிதி விஷயங்களில் சற்று கவனமாக இருங்கள் மற்றும் பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்யவும்.

8 /13

விருச்சிகம்: தொழில் வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கையில் பொறுப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். புதிய முதலீட்டு வாய்ப்புகளை கண்காணிக்கவும் புதிய நிதித் திட்டத்தை உருவாக்கவும் இது ஒரு சிறந்த நேரம்.

9 /13

தனுசு: தொழில் வாழ்க்கையில் லட்சியம் தோன்றும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய உத்தியை உருவாக்குங்கள். உங்கள் திறமைகளை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதி விஷயங்களில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும்.

10 /13

மகரம்: தொழில் வாழ்க்கையில் சாதகமான சூழல் அமையும். உங்கள் எதிர்கால இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். மூத்தவர்களின் உதவியைப் பெறத் தயங்காதீர்கள். பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். பணம் தொடர்பான முடிவுகளை புத்திசாலித்தனமாக கையாளுங்கள். சொத்து, செல்வம் பெருக வாய்ப்புகள் இருக்கும்.

11 /13

கும்பம்: வக்ர சனி வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும். முன்னேற்றப் பாதையில் தடைகளை சந்திக்க வேண்டி வரும். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்ற முயற்சி செய்யுங்கள். தொழில் தொடர்பான முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுங்கள். பண விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்குப் வக்ர சனி கடும் சோதனையைத் தரும். மன உளைச்சல் அதிகரிக்கும். அனைத்து பணிகளும் மந்தகதியில் நடைபெறும். அவசரமான செயல்கள் தீங்கு விளைவிக்கும். திடீர் செலவுகளால் மனம் கலங்கும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.