புத்தாண்டில் அன்னை லட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறும் ‘சில’ ராசிகள்!

2023 ஆம் ஆண்டு அதிர்ஷ்ட ராசி பலன்: புத்தாண்டு தொடங்க இன்னும் சில மணிநேரங்கள் உள்ளன. 2023 ஆம் ஆண்டு தங்களின் வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர். 

1 /4

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வியாழன் மற்றும் சனி போன்ற முக்கிய கிரகங்கள் 2023 ஆம் ஆண்டில் மாறப்போகிறது. இது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும், ஆனால்  மூன்று ராசிக்காரர்களுக்கும் அன்னை மகாலட்சுமியின் அருளை பெற்று வளமாக வாழ்வார்கள் என்று சொல்லலாம்.

2 /4

தனுசு ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் ஆரம்பமே பிரமாண்டமாக இருக்கப் போகிறது. ஜனவரி 17-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால், இந்த ராசிக்காரர்களுக்கு  ஏழரை நாட்டு சனியில் இருந்து விடுதலை கிடைக்கும். இதற்குப் பிறகு, தடைபட்ட அனைத்து வேலைகளும் நிறைவேறும். பண லாபத்தால் பொருளாதார நிலை வலுப்பெறும். வியாபாரிகளுக்கும் இந்த வருடம் மிகவும் சிறப்பாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளும் உருவாகின்றன.

3 /4

மேஷ ராசிக்கு 11-ம் வீட்டில் கர்ம பலன்களை அளிக்கும் சனி பகவான் சஞ்சரிக்கிறார். இது புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும். அன்னை லட்சுமியின் அருளைப் பெறுவதன் மூலம், செல்வம், செழிப்பு மற்றும் அனைத்து வகையான மகிழ்ச்சிகளையும் பெறுவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

4 /4

புத்தாண்டில், சனி மகர ராசியின் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் இந்த ராசிக்கு நான்காம் வீட்டில் தேவகுரு வியாழன் சஞ்சரிக்கிறார். அன்னை லட்சுமியின் அருள் வருடம் முழுவதும் கிடைக்கும். நீங்கள் எதிர்பாராத நிலையில் பணத்தைப் பெறுவீர்கள். இதன் மூலம் நீங்கள் அனைத்து வகையான மகிழ்ச்சிக்கான வழிகளையும் பெற முடியும். வேலைக்காக அலையும் இளைஞர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.