வக்ர நிவர்த்தி அடைந்த சனி பகவான் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தருவார்

Saturn Transit Effect on Zodiacs: மகர ராசியில் சனியின் இயக்கம்: பொதுவாக சனி பகவான் நவகிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். சிலர் அவரை கொடூர கிரகமாகவும் நினைக்கிறார்கள். எனினும், நமது கர்மாக்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிக் கடவுளாவார் அவர். அவர் மக்களுக்கு அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார். வேத ஜோதிடத்தின்படி, சனி பகவான் 23 அக்டோபர் 2022 முதல் மகர ராசியில் தனது இயல்பான இயக்கத்தை துவக்கவுள்ளார். சனி பகவானின் இந்த நிலையால் அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் காணப்படும். எனினும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாக பொழியும். அமோகமான வெற்றி கைகூடும். இந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /5

வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தொழில் துறையில் வெற்றி பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும் கௌரவமும் உயரும்.  

2 /5

தொழில், வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.  

3 /5

நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதனால் பணப் பற்றாக்குறையில் இருந்து விடுதலை பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். முதலீடு லாபகரமாக இருக்கும்.

4 /5

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் சொத்து, வாகனம் வாங்கும் யோகத்தை பெறுவீர்கள். உங்களது வருமானம் அதிகரிக்கும். புதிய தொழிலுக்கான வழிகள் திறக்கப்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பச் சண்டைகளில் இருந்து விடுபடுவீர்கள்.  

5 /5

இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்படும்.