சனி பகவானின் அருளால் உருவாகும் விபரீத ராஜயோகம்: 3 ராசிகளுக்கு அடிக்கும் ஜாக்பாட்

Saturn Transit Effects on Zodiacs: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் ராசியை மாற்றுகிறது. சனி பகவான் அனைத்து கிரகங்களையும் விட மிக குறைவான வேகத்தில் பயணித்து இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகிறார். மேலும், மற்ற கிரகங்களை ஒப்பிடுகையில், சனி அதிக காலத்துக்கு வக்ர நிலையில் இருக்கிறார். தற்போது, ​​சனி பகவான் தனது சொந்த ராசியான மகரத்தில் வக்ர நிலையில் உள்ளார். அக்டோபர் 23, 2022 முதல் இவரது நிலை மாறவுள்ளது. சனியின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் பல ராசிகளின் தலைவிதியையும் மாற்றும். 

1 /4

வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு வரும் சனி பகவான் சக்தி வாய்ந்த விபரீத ராஜயோகத்தை உண்டாக்கி 3 ராசிக்காரர்களுக்கு பலமான பலன்களைத் தரவுள்ளார். இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி பெரிய சாதனைகளை படைப்பார்கள். அந்த அதிர்ஷ்டக்கார 3 ராசிகளை பற்றின் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

2 /4

சனியின் நிலை மாறி விபரீத ராஜயோகம் உருவாவது, மேஷ ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன்களை அளிக்கும். இவர்கள் தொழில், வியாபாரம் ஆகியவற்றில் பெரும் பலன்களைப் பெறுவார்கள். திடீரென்று பண வரவு இருக்கும். எதிர்பாராத இடங்களிலிருந்து பெரிய தொகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். 

3 /4

தனுசு ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். உங்கள் பேச்சுத் திறமையால் இந்த வேளையில் உங்களுக்கு பல வெற்றிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பொருளாதார நிலையில் பெரிய மாற்றம் ஏற்படும். உங்கள் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விபரீத ராஜயோகம் பணம், பொருள் ரீதியான மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் ஈடுபடுபட்டுள்ளவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும்.  

4 /4

மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் விபரீத ராஜயோகம் மூலம் பல வித நன்மைகளை அளிக்கவுள்ளார். இதனால் மீன ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் பிற வியாபாரிகளுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும். புதிய வியாபார ஒப்பந்தம் முடிவாகும். பங்குச் சந்தையில் பணம் சம்பாதிப்பீர்கள். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)