சனியின் மாற்றம்: 3 மாதங்களுக்கு இந்த ராசிகளின் காட்டில் பண மழை

Saturn Transit in October: வேத ஜோதிடத்தில், நீதியின் கடவுளாகக் கருதப்படும் சனி பகவான் 23 அக்டோபர் 2022 அன்று மகர ராசியில் தனது இயல்பு நிலைக்கு மாறவுள்ளார். சனியின் வழக்கமான பாதையில் அவரது இந்த பயணம் தீபாவளிக்கு முந்தைய நாள், அதாவது தன்தேரஸ் அன்று தொடங்கும். ஜனவரி 17, 2023 வரை, சனியின் இயக்கம் இந்த நிலையிலேயே இருக்கும். மேலும், இந்த நேரத்தில், சனி செவ்வாய் கிரகத்தின் நட்சத்திரத்தில் இருப்பார். சனியும் செவ்வாயும் ஒன்றுக்கொன்று பகை உணர்வு கொண்ட கிரகங்கள் ஆகும். 

செவ்வாயின் நட்சத்திரத்தில் சனி இருக்கப்போவதால், சனி மற்றும் செவ்வாயின் அசுப யோகம் உருவாகும். இது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். எனினும், சனியின் மாற்றம் காரணமாக 5 ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். இவர்களுக்கு சனியின் மகாதசையில் சனியின் வக்ர நிலை அதிக தொல்லைகளை அளித்தது குறிப்பிடத்தக்கது. 

1 /5

சனி பகவான் மகர ராசியில்தான் நிலை மாறவுள்ளார். தற்சமயம் மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி நடந்துவருகிறது. எனினும், வக்ர நிலையிலிருந்து சனி பகவான் மாறியவுடன் இவர்கள் நிவாரணம் பெறுவார்கள். தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது நடைபெறும். பண வரவு பலமாக இருக்கும். நிதி பிரச்சனைகள் நீங்கும். இருப்பினும் முழுமையாக நிவாரணம் பெற எப்போதும் சனி பகவானின் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

2 /5

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. சனியின் சஞ்சாரத்தால் கும்ப ராசிக்காரர்களின் பிரச்சனைகள் நீங்கும். சுப பலன்களைப் பெறத் தொடங்குவார்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி இருக்கும்.  

3 /5

இந்த நேரத்தில் தனுசு ராசிக்காரர்களும் ஏழரை நாட்டு சனியின் பிடியில் உள்ளனர். அக்டோபர் 23-ம் தேதி முதல் சனியின் நேரடி சஞ்சாரம் அவர்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். தொழிலில் தடைப்பட்டிருந்த பணிகள் நடகும். பதவி உயர்வு இப்போது கிடைக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

4 /5

இந்த நேரத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் இயக்க மாற்றத்தால் நிம்மதி கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பெரிய சாதனைகளை அடைய முடியும். தடைபட்ட வேலையை முடிக்க இது சரியான நேரம். பண வரவு சாதகமாக இருக்கும்.  

5 /5

துலாம் ராசிக்காரர்களுக்கும் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. எனினும் சனியின் நிலை மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு பெரிய பலன்களை அளிக்கும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பெரிய வேலைகள் குடும்ப உறுப்பினர்களின் உதவியால் முடிவடையும். பல இடங்கலிலிருந்து பண வரவு இருக்கும்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)