இத்தனை விலையுயர்ந்த பொருட்கள் தோனியிடம் உள்ளதா?

பணக்கார கிரிக்கெட்டர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு பல ஆடம்பரமான சொத்துக்கள் உள்ளன.

பணக்கார கிரிக்கெட்டர்களில் ஒருவரான எம்எஸ் தோனிக்கு பல ஆடம்பரமான சொத்துக்கள் உள்ளன.

 

1 /7

தோனி 43 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து இருக்கிறார், இங்கு அவர் பல்வேறு பயிர்கள் மற்றும் பழங்களை விவசாயம் செய்து வருகிறார்.  இந்தப் பண்ணையில், தோட்டக்கலை, மீன்பிடி, கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவையும் செய்யப்படுகிறது.   

2 /7

பிசினஸில் தோனி சிறந்து விளங்குகிறார், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேண்ட் நிறுவனம், பிராண்டடான விளையாட்டு  உடைகள், ஐஎஸ்எல் அணி போன்றவற்றை நிர்வகித்து வருகிறார்.  

3 /7

சில தகவல்களின்படி தோனியிடம் சொந்தமாக ஒரு ஜெட் இருப்பதாக கூறப்படுகிறது, இதன் விலை ரூ.260 கோடி என்று கூறப்படுகிறது.

4 /7

பலராலும் விரும்பக்கூடிய, அதே சமயம் பலரும் வைத்திருக்காத ஒரு பைக்கில் தோனி பயணம் செய்கிறார், கன்ஃபெடரேட் ஹெல்கேட் என்கிற இந்த அற்புதமான பைக்கின் விலை ரூ.47 லட்சம் ஆகும்.  

5 /7

கிரிக்கெட் வீரர்கள் பலரும் கிராமங்களை விட்டு பெரிய நகரங்களுக்கு குடிபெயரும் நிலையில், தோனி மட்டும் ராஞ்சியை விட்டு வெளியேறவில்லை.  அங்கு 7ஏக்கர் பரப்பளவில் பெரிய மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு ஆடம்பரமான பண்ணை வீட்டை கட்டியுள்ளார்.  அந்த வீட்டில் அவரது சொகுசான பைக்குகளும், கார்களும் நிறைந்துள்ளன.  

6 /7

தோனி வைத்திருக்கும் சிறந்த மற்றும் அழகான கார்களில் ஒன்று போர்ஷே 911.  வேகமாக செல்லும் ஸ்போர்ட்ஸ் கார்களில் இது சிறப்பானதாகும், இதன் விலை ரூ.2.55 கோடி ஆகும்.  

7 /7

விண்டேஜ் போண்டியாக் ஃபயர்பேர்ட் டிரான்ஸ் ஆம் கார் இந்தியாவில் அதிகம் காணக்கிடைக்காத ஒரு கார், இது தோனியிடம் உள்ளது.  1970களில் இருந்த இந்த இரண்டு கதவுகள் கொண்ட கார் மிகவும் அரிதானதாக கருதப்படுகிறது.