புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜ பொற்காலம், பணமழை உச்சம், அதிர்ஷ்டம்

Budh Gochar / Mercury Transit : நவ கிரகங்களில் இளவரசன் என அழைக்கப்படக்கூடிய புதன், இன்று காலை 8:38 மணிக்கு கும்பத்தில் இருந்து மீன ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இதனால் பல ராசியினருக்கு மிக சிறப்பான பலன்களை வாரி வழங்க உள்ளது. 

Mercury Transit Budhan Peyarchi : ஒருவருக்கு நுண்ணறிவு, படிப்பு, திறமை உள்ளிட்டவற்றை தரக்கூடிய புதன் பகவான் இன்று மீன ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். புதனின் இந்த பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினருக்கு வேலையில் முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி என நன்மைகள் நடக்க உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /13

மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி கலவையான பலன் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளலாம். வலி அல்லது அலர்ஜி போன்றவை ஏற்படலாம். நிதி இழப்பீடு சந்திக்க நேரிடலாம். 

2 /13

ரிஷப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியால் நல்ல நாட்கள் தொடங்கும். வேலையில் பாராட்டுகளை பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணம் நடக்கலாம். அரசியல்வாதிகளுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்கலாம்.

3 /13

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சிறப்பான பலனைத் தரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். மரியாதை அதிகரிக்கும், உத்தியோகத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். லாபம் கிடைக்கும், உங்கள் நிதி நிலை மேம்படும்.  

4 /13

கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். பணிகள் பாராட்டப்படும். அரசாங்கத்தின் முழு ஆதரவையும் கிடைக்கலாம்.

5 /13

நிலுவையில் இருந்த பணத்தை திரும்பப் பெறுவீர்கள். பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். கலையில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். நல்ல செய்திகளைப் பெறலாம். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் ஈட்டுவதில் வெற்றி பெறுவார்கள்.   

6 /13

நிதி நிலை மேம்படும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீட்டு பொறுப்புக்கள் கூடும். , வாகனம் வாங்கும் ஆசையை நிறைவேற்றுவீர்கள்.   

7 /13

புதன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் தடைகள் அனைத்தும் நீங்கும். புத்திசாலித்தனமாக இருப்பீர்கள். வயிற்றில் கோளாறுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் பெறலாம். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

8 /13

புதனின் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும். மூத்த அதிகாரிகளுடனான உறவு வலுவடையும். 

9 /13

புதனின் இட மாற்றம் தனுசு ராசியினருக்கு ஏற்ற இறக்கமாக பலனைத் தரும். குடும்பத்தில் முரண்பாடுகள் மற்றும் மன கசப்பு பிரச்சினைகள் ஏற்படலாம். நிலம், சொத்து போன்றவற்றில் பிரச்னைகள் வரலாம். வீடு அல்லது வாகனம் வாங்கலாம். கூடுதல் பொறுப்புகளால் சோர்வடைவீர்கள்.

10 /13

புதனின் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு சுமாரான பலனே கிடைக்கும். இளைய சகோதரர்களை விட்டு பிரியும் சூழல் ஏற்படலாம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களுடனான தொடர்பு அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கம். 

11 /13

புதனின் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்கள் எதிர்பாராத பலன்களை பெறுவீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடினமான சூழ்நிலையும் எளிதாக சமாளிப்பீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். தோல் நோய்கள் ஏற்படலாம்.

12 /13

புதன் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். திருமண வாழ்க்கை இனிமையுடன் இருக்கும். கூட்டு தொழிலில் ஆதாயம் உண்டாகும். அரசு டெண்டர் பெறலாம். இந்த கிரகப் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். 

13 /13

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை