நொச்சி இலை... தலைவலி, கழுத்து வலி, மூட்டு வலி எல்லாம் தலைதெறிக்க ஓடும்!

நொச்சி இலை ஆயுர்வேதத்தில் மிகச்சிறந்த மூலிகையாக கருதப்படுகிறது. குறு மரமாக வளரும் தன்மை கொண்ட நொச்சி இலை, உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நோய்களுக்கான தீர்வை வழங்கி வருகிறது. 

முருங்கை மரம், வாழைமரம், வேப்பமரம் போலவே, இந்த நொச்சியும் மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. அதாவது, இந்த செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை.

1 /8

ஆயுர்வேதத்தில் மிகச்சிறந்த மூலிகையாக கருதப்படும் நொச்சியின் இலை மட்டுமல்ல, பூக்கள் விதை  வேர், என் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நொச்சி இலை என்னும் மூலிகை உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நோய்களுக்கான தீர்வை தருகிறது.

2 /8

நொச்சி இலை சுவாசப்பாதையை சீராக்குகிறது. சனித் தொல்லை, ஜலதோஷம் தலைவலி ஆகியவற்றை நீக்கி நுரையீரலை வலுவாக்குகிறது. இதற்கு நொச்சி இலையில் நீரில் போட்டு தொதிக்க வைத்து ஆவி பிடித்தால் போதும். நொச்சி இலைகளில் ஒருவித நறுமண வாசனையுண்டு. அவைதான் சுவாசப்பாதையை சீராக்கி நன்மை அளிக்கிறது. 

3 /8

அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள நொச்சி இலை மூட்டு வலியை குணப்படுத்த மிகவும் சிறந்தது. நொச்சி இலை நீரில் குளிப்பது மூட்டு வலிக்கு நிவாரணம் தரும். நொச்சி இலையை கசக்கி துணியில் துணியில் வைத்து வலி உள்ள இடங்களில் கட்டி வைத்தால் வலி குறைய தொடங்கும்.

4 /8

நல்லெண்ணையில் நொச்சி இலை போட்டு காய்ச்சி, அதனை தலைக்கு தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால், கழுத்து வலி முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணத்தை தரும். 

5 /8

தலைவலி நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை ஆவி பிடித்து வந்தால், தலைவலி நீங்கும். மேலும், சளித்தொல்லை ஜலதோஷம் தலைபாரம் உள்ளிட்ட பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

6 /8

வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும் நொச்சி இலை நல்ல பலன் தரும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கொள்ளும் தன்மை கொண்டது நொச்சி இலை. இதனைப் பாம்பு கடிக்கு விஷமுறிவு மருந்தாக பயன்படுத்தலாம்.

7 /8

சரும பிரச்சனைகளுக்கும் நொச்சி இலை சிறந்த தீர்வாக அமைகிறது. நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. தேமல் உள்ள இடங்களில் நொச்சி இலை சாற்றை பூசி வந்தால் பலன் கிடைக்கும். 

8 /8

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.