ஜனவரி 17 2023ல் கும்பம் செல்லும் சனி, சந்தோஷம் யாருக்கு?

கடந்த ஜூலை 12 சனி பகவான் மகர ராசியில் ஆட்சி பெற்று தற்போது 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை அங்கு தங்கியிருப்பார். இதன் பின் தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையும், இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை பெறுவார்கள். சனிபகவானால் யாருக்கெல்லாம் 2023ஆம் ஆண்டு சந்தோஷம் பிறக்கப்போகிறது..சங்கடங்கள் நீங்கப்போகிறது என்று பார்க்கலாம்.

 

1 /5

மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.  

2 /5

ரிஷப ராசி: ரிஷப ராசிக்கு தொழில் வளர்ச்சியடையும். அதிக பணவரவும் லாபமும் கிடைக்கும். பல வருடங்களாக பட்ட கஷ்டங்களுக்கு பலன்கள் தேடி வரப்போகிறது. புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.   

3 /5

மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்கள் அனுபவித்த கஷ்டங்கள் தீர்வுக்கு வரும். சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும்.

4 /5

கன்னி ராசி: இனி உங்களுக்கு பொன்னான காலம் என்றே கூறலாம். இனி தொட்டது துலங்கும் காலம் கைகூட வரப்போகிறது. புது வேலை, பதவி உயர்வு, நினைத்த ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கை கூடும். திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். 

5 /5

தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு ஜனவரி 2023 முதல் நல்ல காலம் பிறக்கப் போகிறது. பட்ட கஷ்டங்களுக்கு விடிவு காலம் பிறக்கப் போகிறது. திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் வரும். புதிய தொழில் அமையும்.