SBI Loans: குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? இதோ உங்களுக்காக…

எஸ்பிஐ  வங்கி வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான சலுகைகளை வழங்குகிறது. செயலாக்கக் கட்டணம் இல்லாமல் 0.75% வரை மலிவான கடன் கொடுக்கிறது. வைப்புத் தொகை மீதான கூடுதல் வட்டி கொடுக்கும் எஸ்.பி.ஐ வங்கியின் புதிய சலுகைத் திட்டங்களின் விவரங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்...

பண்டிகை காலத்தை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை மழையாக பொழிந்துள்ளது. இதில், வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன் மற்றும் தங்கக் கடன் என பலவிதமான கடன்களையும் குறைந்த வட்டிக்குப் பெறலாம். கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ 0.75 சதவீதம் வரை குறைத்துள்ளது. எந்தவித கடனை வாங்கினாலும் அதற்கு செயலாக்கக் கட்டணம் இல்லை என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம். அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் வங்கியில் வைத்துள்ள வைப்புத்தொகைக்கு கூடுதல் வட்டியும் கிடைக்கும்.   (Image: Reuters)

Also Read | பிரபலமான 5 அரசு திட்டங்களைப் பயன்படுத்தி பயனடையுங்கள்

1 /5

எஸ்பிஐ (State Bank of India) கார் கடன்களுக்கான செயலாக்க கட்டணத்தில் 100% தள்ளுபடி அறிவித்துள்ளது. வங்கியிடம்  கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இதன் பலன் கிடைக்கும். இது தவிர, கார் சாலைக்கு வரும் வரையிலான செலவில் 90 சதவீதம் வரை வங்கி கடன் அளிக்கும். அதே நேரத்தில், YONO SBI செயலியில் இருந்து கார் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது வட்டி விகிதத்தில் 0.25% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். யோனோ பயனர்களுக்கான புதிய காரின் வட்டி ஆண்டுக்கு 7.5% என்ற விகிதத்தில் தொடங்குகிறது.

2 /5

எஸ்பிஐ -யில் தங்கக் கடன் வாங்குவோருக்கு 0.75 சதவீதம் தள்ளுபடி உண்டு. எஸ்பிஐ -யின் பல்வேறு சேனல்கள் மூலம் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 7.5 சதவிகிதம் வட்டியில் தங்கக் கடன் பெறலாம். யோனோ எஸ்பிஐ மூலம் தங்கக் கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் செயலாக்கக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.

3 /5

கொரோனா வாரியர்களுக்கு 0.50 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது எஸ்பிஐ. அதாவது, முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தால், மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அவர்களுக்கு 0.50 சதவீதம் குறைவான வட்டியில் கடன் கிடைக்கும். இது தவிர, கொரோனா வாரியர்ஸ் கார் மற்றும் தங்கக் கடனுக்கும் இந்த தள்ளுபடி கிடைக்கும். (Image: Reuters)

4 /5

எஸ்பிஐ -யின் எந்த சேனலிலிருந்தும் தனிநபர் கடன் மற்றும் ஓய்வூதியக் கடனுக்கு நீங்கள் விண்ணப்பித்தால், செயலாக்கக் கட்டணத்தில் 100% தள்ளுபடி கிடைக்கும்.

5 /5

சுதந்திரத்தின் 75 வது ஆண்டு விழாவில் எஸ்பிஐ பிளாட்டினம் கால வைப்புத்தொகையை கொண்டு வந்துள்ளது. இதன் கீழ், வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் 75 நாட்கள், 75 வாரங்கள் மற்றும் 75 மாத கால வைப்புத்தொகைக்கு 0.15 சதவீதம் வரை கூடுதல் வட்டி பெறலாம். இத்திட்டத்தின் பயனை 2021 ஆகஸ்ட் 15 முதல் 14 செப்டம்பர் 14 வரை பெறலாம்.