Mercury Transit: அக்டோபர் 26ஆம் தேதி புதன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அக்டோபர் 26க்கு பிறகு புதன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். கன்னி ராசியில் ஆட்சியில் உச்சம் பெற்றிருந்த புதன், அக்டோபர் 26க்குப் பிறகு துலாம் ராசியில் சஞ்சரிக்கப்போகிறார்.
Mercury Transit: அக்டோபர் 26ஆம் தேதி புதன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அக்டோபர் 26க்கு பிறகு புதன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். கன்னி ராசியில் ஆட்சியில் உச்சம் பெற்றிருந்த புதன், அக்டோபர் 26க்குப் பிறகு துலாம் ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். ஏற்கனவே சூரியனும், சுக்கிரனும் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், புதனும் துலாம் ராசிக்கு செல்வதால் ஏற்படும் இந்த கிரக சேர்க்கையினால், சில ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேஷம் - புதன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலையை பாதிக்கக் கூடும். செலவுகள் அதிகரிக்கும். சருமம் மற்றும் தொண்டை பிரச்சனைகள் வரலாம். கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
விருச்சிகம் - இந்த காலகட்டத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் சாதகமற்ற சூழல் உருவாகும். செலவுகளில் மிகவும் கவனமாக இருக்கவும். பண பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருக்கவும்.
கும்பம் - கும்பம் வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் செலவுகளும் மிக அதிகமாக இருக்கும். அது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களுடனான உறவிலும் பிரச்சனைகள் வரலாம்.
மீனம் - இந்த ராசிக்காரர்கள் உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கண் சம்பந்தமான சில பிரச்சனைகள் வரலாம். தூசி நிறைந்த இடங்களுக்கு செல்வதை இப்போதைக்கு தவிர்க்கவும். ஏனெனில் இது ஒவ்வாமை தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். (பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளது.)