Black Pepper: கருப்பு மிளகில் ஒளிந்திருக்கும் மருத்துவ நன்மைகளின் விவரம் இதோ!!

Health Benefits of Black Pepper: ஆயுர்வேதத்தில் மிளகு ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது. நமது சமையலறையில் இருக்கும் முக்கிய சமையல் பொருட்களில் கருப்பு மிளகு மிக முக்கியமனதாகும். மிளகை சில உணவு வகைகளில் அப்படியே சேர்த்தும், சிலவற்றில் பொடி செய்து சேர்த்தும் நாம் உணவின் சுவையை அதிகரிக்கிறோம். உணவுக்கு சுவை சேர்ப்பதுடன் மிளகில் பல மருத்துவ குணங்களும் உள்ளன.  கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /6

இரவு உறங்கும் முன்னர், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இஞ்சிச்சாறுடன் ஒரு சிட்டிகை கருப்பு மிளகை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதை தேநீரிலும் கலந்தும் சாப்பிடலாம். 

2 /6

ஒரு ஆய்வின்படி, கருப்பு மிளகு புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஏனெனில் இதில் பைபரின் என்ற ரசாயனம் உள்ளது. மஞ்சளுடன் இதை உட்கொள்வது புற்றுநோயைத் தடுக்கும். இது பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது.

3 /6

கருப்பு மிளகில் உள்ள பைபரின் அளவு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது தசைகளில் ஏற்படும் வலியை தடுக்கிறது. இது மசாஜ் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மிளகை எண்ணெயுடன் கலந்து சூடு படுத்தி, வலி இருக்கும் பகுதிகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் பெறலாம். 

4 /6

கருப்பு மிளகு உட்கொள்வது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உருவாக்குகிறது. இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. இது வயிற்று வலி, வாயு மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளையும் நீக்குகிறது.  

5 /6

இதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்படலாம், ஆனால், இது உண்மை! கருப்பு மிளகை வைத்து ஸ்க்ரப்ப்பிங் செய்வது முகத்தில் பொலிவை அதிகரிக்கும். கருப்பு மிளகை பெரிய துண்டுகளாக நசுக்கி தேனுடன் கலந்து தேய்த்தால் முகம் பளபளக்கும். மேலும், இதனால் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் தோலில் பொலிவு ஏற்படும். மிளகின் அளவு குறைவாக இருக்க வேண்டும்.   

6 /6

கருப்பு மிளகு நம் உடலில் இருக்கும் கொழுப்பையும் குறைக்கிறது. இது செரிமானத்தை நன்றாக வைத்திருக்கிறது. மேலும் குறுகிய காலத்தில் அதிக கலோரிகளை எரிக்கிறது. மிளகு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.