சனி சுக்கிரன் சேர்க்கை: இந்த ராசிகள் வாழ்வில் அமோக வளர்ச்சி, பம்பர் மகிழ்ச்சி!!

Saturn Venus Conjunction: ஜனவரி 17ஆம் தேதி சனி பெயர்ச்சியாகி கும்ப ராசியில் பிரவேசித்தார். அதன் பிறகு ஜனவரி 22ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றி கும்பத்தில் நுழைந்துள்ளார். இந்த வகையில் நீதிக் கடவுளான சனியின் ராசியான கும்பத்தில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நடந்துள்ளது. இந்த சேர்க்கை மிக முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. 

1 /5

சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை அனைத்து 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த சேர்க்கையால் சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். 

2 /5

வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விரைவில் நீங்கி பெரும் வெற்றி கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். 

3 /5

சனி, சுக்கிரன் சேர்க்கை கன்னி ராசியினருக்கு பலமான பலன்களையும் தரும். இவர்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் தடை பட்டிருந்த பணிகள் நடக்கத் துவங்கும். 

4 /5

சனிப்பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி மூலம் சனி பகவானும் சுக்கிரனும் ஒரே ராசியில் இணைந்திருப்பது துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். மன அழுத்தம் நீங்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். 

5 /5

மகர ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சுக்கிரன் இணைவதால் பண லாபம் உண்டாகும். துன்பங்கள் விலகும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். 

You May Like

Sponsored by Taboola