விரைவில் உலகத் தரம் வாய்ந்த New Delhi railway station இப்படித்தான் இருக்கும்

இது ரயில் நிலையம். எந்த நாட்டினுடையது என்று தெரியுமா? இது புதுடெல்லி ரயில் நிலையம் தான்.... நம்ப முடியவில்லையா? இனிமேல் புதுடெல்லி ரயில் நிலையம் இப்படித் தான் இருக்கும்.... 

புதுடெல்லி ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே (Indian Railways) பெரிய மாற்றங்களை செய்யப்போகிறது. மறு அபிவிருத்தி திட்டத்தின் (re-development project) மூலம், இந்த நிலையம் புதியதாகவும், நவீனமாகவும், பயணிகளுக்கான பல வசதிகளுடன் கூடியதாகவும் இருக்கும். புதுடெல்லிக்கு புதிய தோற்றத்தை அளிப்பதற்கான பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. தற்போது ஒப்பந்தத்தை வழங்குவதற்கான ஏல செயல்முறை (bidding process) நடந்து வருகிறது, உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றுவதற்கான நிறுவனம் விரைவில் தேர்வு செய்யப்படும்.  

Also Read | பார்த்து மகிழுங்கள் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு in Pics

1 /6

புது தில்லி ரயில் நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான பொறுப்பு ரயில்வே நிறுவனமான ஆர்.எல்.டி.ஏ (RLDA), ரயில் நில மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஐ.ஆர்.எஸ்.டி.சி (IRSDC) எனப்படும் இந்திய ரயில் நிலைய மேம்பாட்டுக் கழகத்தினுடையது. தனியார் நிறுவனங்களுக்கு ஏல நடைமுறையை திறப்பதற்கு முன்னர், 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முன்னதாக பூர்வாங்க ஏலக் கூட்டமும் நடைபெற்றது.

2 /6

 அதானி, ஜிஎம்ஆர் (GMR), ஜே.கே.பி இன்ஃப்ரா (JKB Infra), அரேபிய கட்டுமான நிறுவனம் (Arabian Construction Company) மற்றும் ஏங்கரேஜ் உள்கட்டமைப்பு (Anchorage Infrastructure) போன்ற நிறுவனங்கள் கலந்துக் கொண்டன. அவை, ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் ஏலத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளன.  

3 /6

புது தில்லி ரயில் நிலையத்தின் மறுவடிவமைப்புக்காக ஆர்.எல்.டி.ஏ ஒரு மெய்நிகர் ரோட்ஷோவை ஏற்பாடு செய்யும். இந்த சாலை  கண்காட்சியின் நோக்கம், திட்டத்தின் வெவ்வேறு பரிமாணங்களைப் பற்றி பங்குதாரர்களுக்கு வெளிப்படையாக விளக்குவது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் 2021 ஜனவரி 14 முதல் 19 வரை ஆன்லைனில் நடைபெறவுள்ள இந்த ரோட்ஷோவில் பங்கேற்பார்கள்.   

4 /6

ஏலம், கட்டுமானம் தொடர்பான விதிமுறைகள் மற்றும் திட்டத்தின் வெவ்வேறு பரிமாணங்கள்   விவாதிக்கப்படும். முன்னணி சர்வதேச ரியல் எஸ்டேட் உருவாக்குநர்கள், உள்கட்டமைப்பு நிறுவனங்கள், ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தெற்காசியா என பல நாடுகளில் இருந்து நிதி நிறுவனங்களை ஈர்ப்பதற்கான முயற்சி இது. இந்தத் திட்டத்தை நன்கு புரிந்துகொள்ள, ரோட்ஷோவின் போது காண்பிக்கப்படும் திட்டம் தொடர்பான ஒத்திகையும் ஆர்.எல்.டி.ஏ தயார் செய்துள்ளது.

5 /6

இந்த திட்டம் குறித்து உலகளாவிய ஏலதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் ஆர்.எல்.டி.ஏ படி, மெய்நிகர் ரோட்ஷோ முன்முயற்சி மூலம், டெல்லியின் மையத்தில் அமைந்துள்ள நியூடெல்லி ரயில் நிலையம் மேம்படுத்தப்படுகிறது. இது டெல்லியின் பிரதான வணிக இட மையமான கன்னாட் பிளேஸுக்கு மிக அருகில் உள்ளது.   

6 /6

நியூடெல்லி ரயில் நிலையம், இந்திராகாந்தி விமான நிலையத்துடன் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைன் மெட்ரோ வழியாகவும், டெல்லி-என்.சி.ஆர் வழியாக யெல்லோ லைன் மெட்ரோ வழியாகவும் இணைக்கப்பட்டுள்ளது. நிலையத்தின் இரு பக்கங்களும் பல்வேறு போக்குவரத்து முறைகளால் இணைக்கப்பட்டுள்ளன.