இந்த வாரம் OTT-ல் வெளியாகவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்!

New Tamil Movies: இந்த வாரம் பிரபல ஓடிடி தளங்களான நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் OTT இயங்குதளங்களில் பல புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாக உள்ளது. 

 

1 /5

பிப்பா (Pippa) நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படம் போர் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  வரும் 10 ஆம் தேதி முதல் Amazon Prime வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.   

2 /5

இருகபற்று (Irugapatru)  வெவ்வேறு பொருளாதார பின்னணியைச் சேர்ந்த மூன்று தம்பதிகளின் திருமண உறவில் ஏற்படும் சிக்கல்களையும், அதற்கான வழிகளையும் எடுத்து சொல்கிறது. நவம்பர் 6 முதல் நெட்ஃபிக்ஸ்-ல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.  

3 /5

ரெயின்போ ரிஷ்டா (Rainbow Rishta)  இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் நவம்பர் 7 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படும். சாத்தியமற்ற கனவுகளை நனவாக்க செய்யும் நபர்களின் கதை.  

4 /5

கூமர் (Ghoomer) சயாமி கெர் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை Ghoomer. இந்த படம் அமேசான் பிரைமில் நவம்பர் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும்.   

5 /5

லேபிள் (Label)  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் வெப் சீரிஸ் லேபிள். இது நவம்பர் 10 ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.