இஞ்சி இடுப்பு, பஞ்சு வயிறு, சின்ன இடை, சிக்குனு எடை: இதுக்கு இந்த பழங்களை சாப்பிடுங்க போதும்

Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை படுத்தி வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உடல் செயல்பாடற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக நாளுக்கு நாள் உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. 

Weight Loss Tips: உடல் பருமன் இந்நாட்களில் பலரை படுத்தி வரும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. உடல் செயல்பாடற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக நாளுக்கு நாள் உடல் பருமனால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. 

1 /8

இது இனிப்பான சுவை கொண்டிருந்தாலும், மற்ற பழங்களை ஒப்பிடுகையில் இதில் சர்க்கரை அளவு குறைவாகவே உள்ளது. இது உடலை நீரேற்றமாக இருக்க வைக்கிறது. இது கலோரிகளை அதிகரிக்காமல் வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. 

2 /8

அதிக அளவு நார்ச்சத்து உள்ள பேரிக்காய் எடை இழப்புக்கு ஏற்றது. இதை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் வயிற்றில் நிரம்பிய உணர்வு அளிப்பதோடு தொப்பை கொழுப்பையும் குறைக்க உதவும். 

3 /8

பப்பாளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், புரதம், கால்சியம் மற்றும் பிற வைட்டமின்களும் காணப்படுகின்றன. பப்பாளியை வெறும் வயிற்றில் உட்கொண்டால், அது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது மட்டுமின்றி சரும பிரச்சனைகளை நீக்கவும் இது உதவுகிறது. கலோரியை எரிப்பதிலும் பப்பாளி பயனுள்ளதாக இருக்கும். 

4 /8

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ள திராட்சை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றது. திராட்சை இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வதிலும் நன்மை பயக்கும். திராட்சை உட்கொள்வதன் மூலம் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையையும் குறைக்கலாம்.

5 /8

செரிமான அமைப்பிற்கு அதிக அளவில் உதவும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், இதை உட்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை வராது. இது உடலுக்கு புத்துணர்ச்சியை அளித்து சோர்வை குறைக்கிறது. செரிமானத்தை சீராக்குவதால்  இதை உட்கொள்வது உடல் பருமனை வேகமாக குறைக்கலாம்.  

6 /8

ஸ்ட்ராபெர்ரி பழத்தை உட்கொள்வதன் மூலம் கலோரிகளை வேகமாகவும் கணிசமாகவும் குறைக்கலாம். இந்த பழம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. இது புத்துணர்ச்சி அளிப்பதுடன் உடலுக்கு உடனடி ஆற்றலையும் அளிக்கின்றது. கலோரி இழப்பு ஏற்படுவதால் இதனால் உடல் பருமன் வேகமாக குறைகின்றது.  

7 /8

இரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ள அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொடாசியம் வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளித்து உடல் எடையை குறைக்க உதவுகின்றன. 

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.