விஜய்யின் தளபதி 68 படத்தின் கதை இதுதானா? அப்செட்டான ரசிகர்கள்!

Thalapathy 68: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கப்போகும் 'தளபதி 68' படத்தின் கதை பற்றிய சில செய்திகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

1 /5

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'லியோ' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கப்போகும் 'தளபதி 68' படத்தில் நடிக்கவிருக்கிறார்.   

2 /5

ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் 'தளபதி 68' படத்தை தயாரிக்க, சுமார்  20 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.  

3 /5

'தளபதி 68' படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.200 சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  இதன்மூலம் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகர் என்கிற பெருமையை விஜய் பெற்றிருக்கிறார்.  

4 /5

'தளபதி 68' படம் அப்பா-மகன் உறவுக்கிடையேயுள்ள ஈகோவை பற்றிய படம் என்று சில செய்திகள் வெளியாகியுள்ளது.  சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படமும் இதே கதைக்களத்தில் தான் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

5 /5

குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த 'வாரிசு' படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், மீண்டும் இதேபோன்ற கதையுள்ள படத்தில் விஜய் நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகளால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.