அஜித் போல பிரபாஸ்!! லீக் ஆனா சாஹோ படத்தின் போட்டோ!!

தற்போது பிரபாஸ் நடித்து வரும் "சாஹோ" படத்தின் சில படங்கள லீக் ஆகியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 2, 2018, 03:07 PM IST
அஜித் போல பிரபாஸ்!! லீக் ஆனா சாஹோ படத்தின் போட்டோ!! title=

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தற்போது பிரபாஸ் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சரத்தா கபூர் நடிக்கிறார். இந்த படத்தை சுஜீத் இயக்குகிறார். இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளிலும் ரூ. 150 கோடி செலவில் உருவாகி வருகிறது.

வெளியானது ’சாஹூ'-வின் பர்ஸ்ட் லுக்!

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. அப்பொழுது பிரபாஸ் கம்பீரமாகா பைக்கில் உட்கார்ந்து ஓட்டுவது போல ஷட்டிங் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை அவரது ரசிகர் இருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

 

முன்னதாக, கடந்த ஏப்ரல் 28-ம் தேதியுடன் "பாகுபலி-2" ஓரண்டை நிறைவு செய்துள்ளது. இதைக்குறித்து நடிகர் பிரபாஸ், தனது முகநூலில் கூறியதாவது:

பிரபாஸ்-கு ஜோடியாகும் 'பத்மாவத்' நடிகை தீபிகா படுகோண்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28 எனக்கு மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான நாளாகும். எனது சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த அழகான மற்றும் உணர்ச்சி பூர்வமான பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி. ராஜமவுலி உள்ளி்ட்ட படக்குழுவனர் அனைவருக்கும் மகத்தான வாழ்த்துக்கள் மற்றும் நன்றி எனக் கூறியுள்ளார்.

'சாஹூ' படத்தில் இணைந்த தமிழ் நடிகர்

"பாகுபலி" (Baahubali: The Beginning ) மற்றும் "பாகுபலி-2" (Baahubali: The Conclusion) படத்திற்காக 5 ஆண்டுகள் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டார் பிரபாஷ்.

இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Trending News