#CauveryIssue: மே-16 ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்: எடப்பாடி!

காவிரி விவகாரத்தில் மே.16 ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!      

Last Updated : May 14, 2018, 01:42 PM IST
#CauveryIssue: மே-16 ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும்: எடப்பாடி!  title=

13:40 14-05-2018
காவிரி விவகாரத்தில் மே.16 ஆம் தேதி தமிழகத்துக்கு நல்ல தீர்ப்பு வரும் என்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!


12:01 14-05-2018
காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மே 16ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!


11:56 14-05-2018
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு வழக்கினை விசாரித்து வருகின்றது

11:55 14-05-2018
காவிரி வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இது குறித்து  மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்து வருகிறார்.


11:05 14-05-2018
காவிரி வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான செயல்திட்டத்தை யு.பி.சிங் இன்று தாக்கல் செய்யவுள்ளார்!


காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். 

இதையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, விரிவான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கோரி வந்தது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்று வருவதால் திட்டத்திற்கு ஒப்புதல் பெற இயலவில்லை என மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது. 

கடந்த 3ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, மே 14ஆம் தேதி, காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கர்நாடகாவில் தேர்தல் நேற்று முன்தினம் முடிந்துவிட்ட காரணத்தினால்,  இன்று நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்  இன்று கண்டிப்பாக காவிரிக்கான வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் இன்று கண்டிப்பாக திட்டம் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. 

Trending News