சுவீடனை-யடுத்து லண்டன் வந்தடைந்த பிரதமர் மோடி!!

சுவீடன் பயணத்தை முடித்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பிரிட்டன் தலைநகர் லண்டன் வந்தடைந்தார். லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

Last Updated : Apr 18, 2018, 06:31 AM IST
சுவீடனை-யடுத்து லண்டன் வந்தடைந்த பிரதமர் மோடி!! title=

பிரதமர் மோடி 5 நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார். 

முதற்கட்டமாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோபென் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுவீடனில், இந்தியா மற்றும் சுவீடன் நாடுகளுக்கு இடையே, ராணுவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. 

தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மோடி, சுவீடன் சுற்றுப்பயணத்தை முடித்து பிரிட்டன் வந்தடைந்தார். லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

இதை தொடர்ந்து, இன்று காலை பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை மற்றும் வெளியுறவுச் செயலரை பிரதமர் சந்திக்கிறார்.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காமன்வெல்த் மாநாடு....! 

இன்று(ஏப்.,18) முதல் 20ம் தேதி வரை லண்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட 53 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். 

அவர் தொடர்ந்து, லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிடுகிறார். 

இதையடுத்து, இன்று மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை மோடி சந்திக்க உள்ளார். 

வரும் 20ம் தேதி தனது பிரிட்டன் பயணத்தை முடித்து, ஜெர்மனி செல்லும் மோடி, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசுகிறார். 

Trending News