புதுச்சேரியின் புதிய முதல்வர்- நாராயணசாமி

Last Updated : Jun 6, 2016, 01:56 PM IST
புதுச்சேரியின் புதிய முதல்வர்- நாராயணசாமி

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி  பதவியேற்றுக் கொண்டுள்ளார். புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின், பொன்முடி, ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் நாராயணசாமி மற்றும் அவரது அமைச்சர்களாக நமச்சிவாயம், நல்லடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜஹான், கமலக்கண்ணன் ஆகியோரருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

More Stories

Trending News