SC; ST சட்டம் குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு!

எஸ்.சி.எஸ்.டி. சட்டம் குறித்து மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்!

Last Updated : Apr 2, 2018, 06:38 AM IST
SC; ST சட்டம் குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு! title=

எஸ்.சி.எஸ்.டி. சட்டம் குறித்து மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்.சி.எஸ்.டி. சட்டத்தின் கடுமையான பிரிவை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் சமூக நீதிதுறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வுமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

எஸ்.சி.எஸ்.டி. சட்டம் குறித்து மத்திய அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய நிலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தலித் அமைப்புகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

தலித் அமைப்புகள் நாடு தழுவிய போரட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் இன்று நடைபெற இருந்த சி.பி.எஸ் இ., பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் மாநில அரசு போக்குவரத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. கலவரம் அதிகம் பரவாமல் இருக்கும் விதமாக இண்டர் நெட் சேவையையும் தற்காலிகமாக முடக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறபடுகிறது.

Trending News