காகங்களுக்கு “பூஜ்ஜியம்” என்பதன் அர்த்தம் தெரியுமா.. ஆய்வுகள் கூறுவது என்ன

காகங்கள் மிகவும் புத்திசாலித்தனமான பறவைகளாகக் கருதப்படுகின்றன. குழந்தையாக இருக்கும் போது நாம்,  தாகமுள்ள காகம் கூழாங்கற்களை குடத்தில் போட்டு தண்ணீரை எப்படி மேலே கொண்டு வந்தது என்பதையும் படித்திருப்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 20, 2021, 05:13 PM IST
  • விஞ்ஞானிகள் காகங்களின் மூளையைப் படிக்க இரண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.
  • இரண்டு ஆண் கேரியன் காகங்கள் மீது ஆய்வு நடத்தப்பட்டது .
  • காகங்கள் ஒரு கணினித் திரைக்கு முன்னால் ஒரு மரத் துண்டில் அமர வைக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
காகங்களுக்கு “பூஜ்ஜியம்” என்பதன் அர்த்தம் தெரியுமா.. ஆய்வுகள் கூறுவது என்ன title=

காகங்கள் மிகவும் புத்திசாலித்தனமான பறவைகளாகக் கருதப்படுகின்றன. குழந்தையாக இருக்கும் போது நாம்,  தாகமுள்ள காகம் கூழாங்கற்களை குடத்தில் போட்டு தண்ணீரை எப்படி மேலே கொண்டு வந்தது என்பதையும் படித்திருப்போம். பறவைகளிலேயே மிகவும் அறிவார்ந்த பறவையாக கருதப்படும் காகத்திற்கு, பூஜ்ஜியத்தின் பொருள் தெரியும் என்பது, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

பூஜ்ஜியம் என்ற கருத்து ஐந்தாம் நூற்றாண்டில் அல்லது சற்று முன்னதாக ஏற்பட்டது. இதை உலகிற்கு வழங்கிய பெருமை இந்தியாவிற்கு உண்டு. பூஜ்ஜியம் என்ற எண்ண எந்த எண் உடனும் கூட்டவோ, கழிக்கவோ, பெருக்கவோ முடியும். இதில் கூட்டல் மற்றும் கழித்தலில் பூஜ்ஜியத்துடன் எந்த எண்ணை கழித்தாலும் , கூட்டினாலும் அந்த எண்ணிற்கான மதிப்பு மாறாது. பூஜ்ஜியத்துடன் பெருக்கினால் அந்த எண் பூஜ்ஜியமாக மாறிவிடும்.

காகங்கள் கூட பூஜ்ஜியம் என்னும் கருத்தை புரிந்துகொள்வது மிகவும் ஆச்சரியமாக  அளிப்பதாக உள்ளது. பூஜ்ஜியத்தைப் பற்றி  எதுவும் கற்ப்பிக்கப்படாத காகங்கள் கூட பூஜ்ஜியத்தைப் பற்றி புரிந்துகொள்வது எப்படி சாத்தியமாகும். 

ALSO READ | சின்ன சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை.... ஆனால் மனிதனால் பறக்க முடிவதில்லையே ஏன்...!!!

ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் நியூரோபயாலஜி இன்ஸ்டிடியூட்டில் விலங்கு உடலியல் பேராசிரியர் ஆண்ட்ரியா நைடர் கூறுகையில், ” பூஜ்ஜியம் வெறுமையை குறிக்கலாம், ஆனால் இது காகங்களை பொறுத்தவரை காகங்கள் பூஜ்ஜியத்தையும் ஒரு எண்ணாக கருதுகிறது. ஒரு ஆய்வின் போது, ​​காகங்களின் மனதை படிக்க பல முறை முயற்சித்தோம். இதில் அவை வேறு எந்த எண்ணையும் போல பூஜ்ஜியத்தைப் புரிந்துகொள்கின்றன என்பது கண்டறியப்பட்டது” என்றார்.

தி ஜர்னல் ஆஃப் நியூரோ சயின்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, விஞ்ஞானிகள் காகங்களின் மூளையைப் படிக்க இரண்டு சோதனைகளை மேற்கொண்டனர், இதற்காக இரண்டு ஆண் கேரியன் காகங்கள் மீதுஆய்வு நடத்தப்பட்டது . காகங்கள் ஒரு கணினித் திரைக்கு முன்னால் ஒரு மரத் துண்டில் அமர வைக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு சோதனையிலும், காகங்களுக்கு சாம்பல் திரையில் பூஜ்ஜியம் மற்றும் நான்கு கருப்பு புள்ளிகள் ஒரே நேரத்தில் காண்பிக்கப்பட்டன

இதன் பின்னர் காகங்களுக்கு மற்ற எண்களுடன் புள்ளிகள் காட்டப்பட்டன. காகங்கள் திரையில்  எண்களுடன் புள்ளிகளையும் பார்க்கும் போது, உடனடியாக திரையை குத்தியோ அல்லது தனது தலையை அசைத்தோ காண்பித்தன. பூஜ்ஜியம் முதல் பல எண்கள் காட்டப்பட்டன. வெறும் கருப்பு நிற புள்ளிகள் மட்டும் காண்பித்த போது அமைதியாக இருந்தன. கருப்பு நிற புள்ளிகளும் பூஜ்ஜியமும் கிட்டத்ட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், அவை இரண்டையும் காகத்தினால் வேறுபடுத்தி பார்க்க முடிந்தது அனைவருக்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது. 

மேலும் படிக்க | நமக்கு ஏன் வியர்க்கிறது... வியர்வைக்கும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா..!!!

2015 ஆம் ஆண்டில், காகங்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது, அதில் காகங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் படங்கள் மற்றும்  பொருந்தாத, சில வித்தியாசங்களுடன் இருக்கும் படங்களையும் கண்டறிகிறது என்பது தெரிய வந்தது. 

 

Trending News