NeoCov: கொரோனாவின் புதிய மாறுபாடான நியோகோவ் மீண்டும் ஒரு புயலைக் கிளப்புமா?

நியோகோவ் என்ற புதிய வைரஸ் தொடர்பான முழு விவரங்கள் கொஞ்சம் பயத்தையும், ஓரளவு ஆசுவாசத்தையும் தருகிறது....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2022, 12:03 PM IST
  • கொரோனாவின் புதிய மாறுபாட்டின்ஆபத்து
  • சீனா வுஹான் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
  • தென்னாப்பிரிக்க வெளவால்களில் பாதிப்பு
NeoCov: கொரோனாவின் புதிய மாறுபாடான நியோகோவ் மீண்டும் ஒரு புயலைக் கிளப்புமா?  title=

NeoCov: உலகம் ஏற்கனவே கொரோனா டெல்டா பிளஸ் மற்றும் ஓமிக்ரான் வகைகளுடன் போராடி வரும் நிலையில், சீனாவில் உள்ள வுஹான் ஆய்வக விஞ்ஞானிகள் மற்றொரு நியோகோவ் என்ற ஆபத்தான வைரஸ் (NeoCov news)தொடர்பான விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

இது மக்களிடையே அச்சத்தை அதிகரித்திருப்பதால், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த வைரஸ் தொடர்பான முழுமையான விவரங்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

நியோகோவ் என்ற கொரோனா வைரஸின் பிறழ்வு (the novel coronavirus) தற்போது தென்னாப்பிரிக்காவில் விலங்குகளிடம் பரவி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் கருத்துப்படி, இந்த மாறுபாடு முதலில் தென்னாப்பிரிக்காவில் வௌவால்களில் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த மாறுபாடு அதிக இறப்பு விகிதத்துடன் தொடர்புடையது.நியோகோவி வைரஸைப் பற்றி அச்சுறுத்தும் எதையும் பல நிபுணர்கள் இன்னும் பார்க்கவில்லை, இது மக்கள் மீது அதன் சாத்தியமான தாக்கத்தை குறைத்து மதிப்பிடுகிறது.

ALSO READ | ஓமிக்ரான் ஒருவரை எத்தனை முறை பாதிக்கும்? அச்சுறுத்தும் ஆய்வுகள்

NeoCoV என்பது சுவாச நோய்க்குறியுடன் (MERS COV) இணைப்புகளைக் கொண்ட ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸ் 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

இருப்பினும், NeoCoV மனிதர்களில் SARS-CoV-2 (கொரோனா நாவல்) உடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.

corona

ஆனால்: இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் நியோகோவ் வைரஸால் பீதி அடைய வேண்டாம் என்று நம்பிக்கைக் கொடுத்துள்ளனர்.

"தற்போது, ​​நியோகோவ் மனித உடலைப் பாதிக்கிறது என்பதற்கு நேரடி ஆதாரம் இல்லை, நாம் பீதி அடையவோ அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகவோ கூடாது" என்று இந்தியாவின் தேசிய மற்றும் மகாராஷ்டிராவின் கோவிட்-19 பணிக்குழுவின் உறுப்பினரான டாக்டர் ராகுல் பண்டிட் கூறினார்.

ALSO READ | ஓமிக்ரானை ஓட ஓட விரட்டும் உணவுகள்!

உலகில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல வைரஸ்கள் உள்ளன, அவற்றின் பண்புகள் தெரியவில்லை எனவே அவற்றை நினைத்து அச்சமடையத் தேவையில்லை.

தற்போது உலகம், சவாலான காலகட்டத்தை கடந்து வருகிகிறது. தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் COVID-19 தொற்றுநோயை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் பீதி அடைய வேண்டாம், பாதுகாப்பாக இருக்கவும், கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது.  

ஏற்கனவே கொரோனா பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இந்த செய்தி ஆறுதல் அளிப்பதாக இருக்கலாம். நியோகோவ் என்ற வைரஸ் தொடர்பான ஆய்வை வூஹான் விஞ்ஞானிகள் ஏன் மேற்கொண்டனர் என்ற பின்னணி சுவராசியமானது.

ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னரே இருந்த நியோகோவ் வைரஸ் மனிதர்களை தாக்கவில்லை. தற்போது வவ்வால்களை மட்டுமே பாதிக்கும் நியோகோவ் வைரஸை (NeoCov news), வூஹான் பல்கலைக் கழகத்தின் பரிசோதனைக் கூடத்தில் விஞ்ஞானிகள் ஆய்வுகள் செய்தனர்.

ALSO READ | கொரோனாவின் இறுதிச்சுற்று! மருத்துவ நிபுணரின் இனிப்பான செய்தி

அதில் வவ்வால்களின் உடலின் செல்களுக்குள் நுழைய நியோகோவ் வைரஸ் பயன்படுத்தும் ACE2 repector தொடர்பாக கவனம் தரப்பட்டது. 

வவ்வால்களை தாக்கும் இந்த வைரஸ், மனிதர்களை தொற்றுவதற்கு ஒற்றை மூலக்கூறு மட்டுமே தடையாக இருப்பது அந்த ஆய்வில் தெரிய வந்தது. 

எனவே, அந்த ஒரு மூலக்கூறை மாற்றி மரபணு தொழில் நுட்பத்தின் மூலம் நடந்த அந்த மாற்றத்தில் ACE2 repector மாற்றம் அடைந்தது.

மனிதர்களை தொற்றும் சக்தியை பெற்ற அந்த வைரஸ், கொரோனாவின் நோயெதிர்ப்பு சக்திகளும் தடுக்க இயலாத அளவு வீரியம் பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்தது. 

இந்த ஆய்வுக் கட்டுரை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், நியோகோவ் என்ற வைரஸ் தொடர்பான அச்சம் ஒரேயடியாக முடிந்துவிடவில்லை என்பது கவலை தரும் செய்தியாக இருந்தாலும், இப்போது நியோகோவ் வைரஸால் (NeoCov news) உடனடியான பாதிப்பு ஏதும் இல்லை என்பது ஆறுதலளிக்கும் செய்தியாகும். 

ALSO READ | டெல்டா- ஒமிக்ரான் கலந்து உருமாறிய புதிய வைரஸ், அலட்சியப்படுத்த வேண்டாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News