ஐஸ் கட்டியிலிருந்து வெண்நிறப்புகை வருவதன் காரணம் என்ன!

நம்மை சுற்றி நடக்கும் பல பொதுவான விஷயங்களில் மிகவும் சுவாரஸ்யமான, அறிவியல் காரணங்கள் உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 25, 2021, 06:25 PM IST
ஐஸ் கட்டியிலிருந்து வெண்நிறப்புகை வருவதன் காரணம் என்ன! title=

ஐஸ் கட்டியை தண்ணீரில் போடும் போது, அதிலிருந்து வெண்புகை வெளியேறுவதைக் காணலாம். மேலும், ஐஸ் கட்டியிலிருந்தும், வெண்புகை வெளியேறுவதை காணலாம். அது பனி மூட்டமோ அல்லது கார்பன் டை ஆக்சைடோ அல்ல.

ஐஸ் கட்டியிலிருந்து வெண்புகை எப்படி வெளியேறுகிறது?

வெளியில் வைக்கப்பட்டுள்ள ஐஸ் கட்டிகளில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறும். இந்தப் புகை ஒரு வாயு அல்ல, ஐஸ் கட்டியின் குளிர்ச்சியால் பனிக்கட்டியைச் சுற்றியுள்ள காற்று குளிர்ச்சியடையும் போது, ​​அதிலுள்ள நீராவி நீர்த்துளிகளாக மாறும். உறைந்த நீராவி காற்றில் புகை போல் தெரிகிறது.

ALSO READ | Aadhaar card தொலைந்து விட்டதா; நொடியில் ஆதார் உங்கள் கையில்..!!

திட, திரவ மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளில் நீர் உள்ளது. நீர் திடமாக இருக்கும்போது பனிகட்டி என்றும், திரவமாக இருக்கும்போது நீர் என்றும், வாயு நிலையில் இருக்கும்போது நீராவி என்றும் அழைக்கப்படுகிறது. பனிக்கட்டியில் உள்ள H2O மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உறுதியாகப் பிணைக்கப்பட்டுள்ளன. அவை திரவ நிலையில் சிறிதளவு குறைவான வலிமையுடனும், வாயு நிலையில் இன்னும் குறைவான வலிமையுடனும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. வாயு நிலையில், H2O இன் மூலக்கூறுகள் அதிக ஆற்றலைக் கொண்டிருக்கின்றன, இதன் காரணமாக அவை இயக்க நிலையில் உள்ளன.

பனிக்கட்டியிலிருந்து நீராவி எப்படி வெளியேறுகிறது?

நீர் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்குக் குறைவாக இருக்கும்போது, ​​அது பனிக்கட்டி வடிவத்தை எடுக்கும். காற்றில் வாயு நிலையில் உள்ள நீர், பனியின் மேற்பரப்பைத் தொடும்போது, ​​​​அதில் உள்ள நீரின் மூலக்கூறுகள் குளிர்ந்து சிறிய துளிகளாக வெளியேறத் தொடங்குகின்றன. காற்றில் வாயு நிலையில் நீர் உள்ளது. பனிக்கட்டியின் மேற்பரப்பை காற்று தொடும் போது, ​​வாயு நிலையில் இருந்த காற்றில் இருக்கும் நீர், நுண்ணிய நீர்த்துளிகளாக மாறுகிறது. அந்த சிறு துளிகளை நீராவி வடிவில் காண்கிறோம்.

ALSO READ | Jackpot! இந்த '2' ரூபாய் நாணயம் இருந்தால், நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News