அஜித் என்றாலே மரியாதை... அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் ட்விட் போடலாமா? ரசிகர்களே

நடிகை கஸ்தூரிக்கு பதிலடி தருகிறோம் என்ற பேரில், மிகவும் வெறுக்கத்தக்க ஆபாசமான வாரத்தைகளால் திட்டி "அஜித் ரசிகர்கள்" என்ற பெயரில் இருக்கும் சிலர் பதிவுகளை போட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 20, 2020, 04:36 PM IST
அஜித் என்றாலே மரியாதை... அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் ட்விட் போடலாமா? ரசிகர்களே

புது டெல்லி: சமூக வலைத்தளமான ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் மற்றும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே ஏற்பட்டுள்ள வாரத்தை போரால் இருவரும் மாறி மாறி தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர். அஜித் ரசிகர் ஒருவர் ஆபாசமாக பேசியதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை கஸ்தூரி, அதில் "மாட்டுக்கு சூடு, மனுஷனுக்கு சொல்லு. பீ தின்னும் புழுவுக்கு என்ன செய்வது? அஜித் ரசிகன்னு பீத்தி அவர் பேரை ரிப்பேர் ஆக்காதீங்கடா. பொண்ணு வேணும்னா எதுக்கு வெளியில தேடுறீங்க? உங்க அம்மா சகோதரி கிட்டே போயி கேளுங்க" எனக் கூறி #dirtyAjithFans என்ற ஹெஷ்டேக் போட்டு காட்டமாக பதிலடி வந்துள்ளார். 

#dirtyAjithFans என்ற ஹெஷ்டேக் போட்டதால், பொங்கி எழுந்த அஜித் ரசிகர்கள், நடிகை கஸ்தூரிக்கு பதிலடி தரும் வகையில் "#DirtyKasthuriAunty" என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

நடிகை கஸ்தூரிக்கு பதிலடி தருகிறோம் என்ற பேரில், மிகவும் வெறுக்கத்தக்க ஆபாசமான வாரத்தைகளால் திட்டி "அஜித் ரசிகர்கள்" என்ற பெயரில் இருக்கும் சிலர் பதிவுகளை போட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இவர்கள் அஜித் ரசிகர்களா? என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

பதிலடி கொடுக்க எவ்வளவு வழிகள் இருந்தும், பெண் என்று பாராமல், இப்படி அநாகரிகமாகவும் ஆபாசமாகவும் ட்விட் போடலாமா? அஜித் ரசிகர்களே..? இது உங்கள் தலைவர் அஜித் கூட ரசிக்க மாட்டார். அஜித் என்றாலே ஒரு மரியாதையை இருக்கு. அவரின் ரசிகர்களுக்கு கூடுதல் மதிப்பு இருக்கு. ஆனால் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களை பார்த்தால், அஜித் ஏன் ரசிகர் மன்றத்தை கலைத்தார் என்பதன் அர்த்தம் புரிகிறது.

அஜித் சாரை விமர்சிக்க அனைவருக்கும் தகுதி இருக்கு. ஏனென்றால் அவர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அவரை விமர்சிப்பவர்களை தரக்குறைவாக பேச அஜித் ரசிகர் என்ற போர்வையில் சுற்றும் சிலருக்கு தகுதி இல்லை. அவர்களை அடையாளம் கண்டு கண்டிப்பது நல்ல அஜித் ரசிகர்களின் கடமையாகும் என்பதை ஒரு அஜித் ரசிகனாக இங்கு பதிவு செய்கிறேன்.

நிறைய பேர் நினைக்கலாம், அஜித் ரசிகர்களை கிண்டல் செய்த நடிகை கஸ்தூரியை மட்டும் எதுவும் சொல்லவில்லை என்று, சொல்வதற்கு என்ன இருக்கிறது. அதிகமாகவே சில அஜித் ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

More Stories

Trending News