அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் K13, FirstLook வெளியானது!

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு K13 என பெயரிடப்பட்டுள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 4, 2019, 12:04 PM IST
அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் K13, FirstLook வெளியானது! title=

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு K13 என பெயரிடப்பட்டுள்ளது!

இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி தற்போது, ஸ்ரத்தா ஸ்ரீநாத் உருவாகி வரும் திரைப்படம் K13. படத்தின் படபிடிப்பு வேலைகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், பின்னணி வேலைகள் மும்முறமாக நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் FirstLook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இயக்குனர் பரத் தெரிவிக்கையில்... ‘K13 என்பது ஒரு வீட்டின் முகவரி, அது இந்த படத்தின் கதையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டது. படத்தின் கதை பற்றி தற்போது கூற இயலாது, பார்வையாளர்களே படத்தை பார்த்து அனுபவிக்க வேண்டும் என விரும்புவதால் படத்தை குறித்து தற்போது கூற இயலாது’ என தெரிவித்துள்ளார்.

படத்தின் முதல் பார்வை புகைப்படம், இப்படம் த்ரில்லர் பானியில் அமைந்திருக்கலாம் என தெரிவிக்கிறது. டிமான்டி காலனி என்னும் திரில்லர் திரைப்படத்தில் நடித்த அருள்நிதி, தனது துடிப்பான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்நிலையில் தற்போது உருவாகி வரும் K13 மீண்டும் டிமான்டி ஸ்ரீநிவாசனை திரையில் காண்பிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த K13 திரைப்படத்தை எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்கிறார்கள். கிஷோர் சம்பத் மற்றும் டெஸாஸ்ரீ டி இணை தயாரிப்பு. தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இத்திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது.

Trending News