நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஐதராபாத்தில் வைத்து இன்று திருமணம் நடந்து முடிந்தது. அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ஆர்யா இன்று நடிகை சாயீஷாவை காதல் திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஆர்யா 2005-ம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். அவருக்கு தற்போது 38 வயது ஆகிறது.
கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. சாயிஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று, சாயிஷாவையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக நடிகர் ஆர்யா ட்விட்டரில் பதிவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர்-நடிகைகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணம் முடிந்ததும் சாயீஷாவுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Forever and Ever @sayyeshaa pic.twitter.com/gtLu8ilP2c
— Arya (@arya_offl) March 10, 2019
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.