பிரபாஸின் ‘சாஹூ’ திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியானது!

பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் சாஹூ. இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியினை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

Last Updated : May 22, 2019, 06:47 AM IST
பிரபாஸின் ‘சாஹூ’ திரைப்படம் வெளியீட்டு தேதி உறுதியானது!

பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் சாஹூ. இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதியினை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

இயக்கிநர் சுஜீத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் ‘சாஹூ'. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Here it is darlings, for all of you... The new official poster of my next film Saaho. See you in theatres on 15th August!  #15AugWithSaaho @officialsaahomovie @sujeethsign @shraddhakapoor @uvcreationsofficial #BhushanKumar @tseries.official

A post shared by Prabhas (@actorprabhas) on

UV கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அதிரடி படமாக உருவாகிறது.
 
இந்த படத்திற்கு சங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் ஆக்ஷன் கலந்த ரேசிங் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories

Trending News