பெண் ஒருவர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்பதற்காக அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கியதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்!
ராமநகரா மாவட்டம் கொடிகெஹள்ளி (Kodigehalli) என்ற கிராமத்தை சேர்ந்த ராஜம்மா என்பரை ஊர்மக்கல் மின் கம்பத்தில் கட்டிவைத்தனர். அவரை அவர்கள் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ராஜம்மா உணவகம் நடத்துவதற்காக பலரிடம் 12 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றதாகவும் நஷ்டம் காரணமாக கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலையில் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தர்மசாலாவில் இருந்த ராஜம்மாவை வலுக்கட்டாயமாக அழைத்து வந்த ஊர்மக்களில் சிலர் அவரை கம்பத்தில் கட்டிவைத்து தாக்கினர். இது தொடர்பாக 7 பேரை கைது செய்துள்ள போலீசார் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகின்றனர். இந்த வீடியோவை ANI செய்திநிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருவதுடன், பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
#WATCH A woman was tied to a pole in Kodigehalli, Bengaluru, yesterday, allegedly for not repaying a loan she took. Police have arrested 7 people in connection with the incident. #Karnataka pic.twitter.com/jpwX3Cr0Gu
— ANI (@ANI) June 14, 2019