புலிக்குட்டியை துரத்தி துரத்தி கொத்தும் வாத்து வீடியோ வைரல்

புலிக்குட்டி ஒன்றை வாத்து துரத்தி துரத்தி கொத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இது என்னடா சாமி புலிக்குட்டிக்கு வந்த சோதனை என வியந்து பார்க்கின்றனர் நெட்டிசன்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 21, 2023, 09:41 PM IST
புலிக்குட்டியை துரத்தி துரத்தி கொத்தும் வாத்து வீடியோ வைரல்  title=

இருக்கும் இடத்தில் இருந்தால் தான் எதற்கும் மதிப்பு என்பதற்கு இந்த வீடியோவே எடுத்துக்காட்டு. ஏனென்றால், புலிக்குட்டியை ஒரு வாத்து துரத்தி துரத்தி கொத்துகிறது. இதனை பார்ப்பவர்களுக்கு வாத்து, புலியை அட்டாக் செய்கிறதே என்ற வியப்பு கூட ஏற்படலாம். காட்டை பொறுத்தவரை சிங்கம் தான் ராஜா என்பதை சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், விலங்கியல் ஆய்வாளர்களைக் கேட்டால் சிங்கத்தை விட வலிமை வாய்ந்தது புலி என்பார்கள். அது வேட்டையாடுவதிலும், தந்திரத்திலும், ஓடுவதிலும் ஆகச்சிறந்த விலங்கு எதுவென்றால் உடனடியாக கூறிவிடுவார்கள் புலி என்று. 

மேலும் படிக்க | Viral Video: குட்டிகளை காக்க முள்ளம்பன்றிகள் சிறுத்தையுடன் நடத்தும் போராட்டம்!

ஆனால், அத்தகைய வலிமையான புலியை ஒரு வாத்து துரத்தி துரத்தி கொத்துகிறது என்றால், நம்ப முடிகிறதா?. எப்பேர்பட்ட விலங்கையும் அசால்டாக அடித்து துவம்சம் செய்யும் விலங்கு புலி, தன் வேட்டை தந்திரத்துக்கு துளியும் அருகில் வர முடியாத வாத்துவிடம் கடி வாங்குவதையெல்லாம் நினைத்துக் கூட நம்மால் பார்க்க முடியாது. ஆனால் அது நடந்திருக்கிறது. இணையத்தில் வைரலாகியிருக்கும் வீடியோவில் விலங்குகள் பராமரிப்பு மையத்தில் இப்படியான சம்பவம் நடந்திருப்பதை அறியமுடிகிறது.

அங்கு சிறிய புலிக்குட்டி முதல் வாத்து உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் கூண்டிற்குள் அடைத்து வளர்க்கிறார்கள். அப்படி வளர்க்கும் இடத்தில் புலிக்குட்டி ஒன்று கூண்டை விட்டு வெளயே வந்து விளையாடும்போது அங்கிருக்கும் வாத்து, அந்த புலிக்குட்டியை துரத்தி துரத்தி கொத்துகிறது. புலிக்குட்டியின் பலம் உணர்ந்திருந்தால், வாத்து அந்த நேரம் மேலோகத்துக்கு டிக்கெட் போட்டிருக்கும். ஆனால், புலிக்குட்டிக்கு அதன் பலம் தெரியாததால் வாத்து எப்படியோ ராஜாபோல் வாலாட்டியிருக்கிறது. 

இந்த வீடியோவை பார்த்த பலரும் யாராக இருந்தாலும் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் மதிப்பு. வளர்ப்பு முறையே ஒருவரின் குணாதிசயத்தை தீர்மானிக்கிறது என்றும் பாடமெல்லாம் எடுக்கத் தொடங்கிவிட்டனர். எது எப்படியோ இந்த வீடியோ இப்போது டிவிட்டரில் வைரலாகியிருக்கிறது.

மேலும் படிக்க | ஆப்பிள் சாப்பிட்டு கடுப்பேத்திய குரங்கு: தோஸ்த் குரங்கின் மாஸ் ரியாக்‌ஷன், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News