இந்தியாவில் திருமணங்கள் என்றாலே ஒரு பெரிய கொண்டாட்டமாக தான் இருக்கும், திருமணத்திற்கென்றே ஒரு தனி தொகையை நாம் செலவிட வேண்டியது இருக்கும். திருமண விழாக்கள் ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், மறுபுறம் பெரியளவிலான செலவை ஏற்படுத்திவிடும். பலரும் போட்டிபோட்டுக்கொண்டு அதிகமான செலவுகளை செய்து திருமணத்தை நடத்துகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் மிக விலையுயர்ந்த திருமணங்களில் ஒன்றாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி செய்துள்ளார். கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி அவரது மகளின் திருமணத்திற்காக ரூ.500 கோடிக்கும் மேல் செலவு செய்து இருப்பது அனைவரையும் வியக்கவைத்துள்ளது.
மேலும் படிக்க | பயங்கர மலைப்பாம்புடன் பந்தாவா விளையாடும் சிறுமி: ஷாக்கில் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணியின் திருமணம், கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியன்று நடைபெற்றது. இந்த திருமணம் ஐந்து நாட்கள் கொண்டாட்டத்துடன், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருந்தினர்களுடன் கோலாகலமாக நடத்தப்பட்டது. திருமணம் சிறப்பாக நடத்தியது மட்டுமின்றி, திருமண அழைப்பிதழிலும் இவர்கள் சிறப்பை காட்டியுள்ளனர். விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட திருமணம் அழைப்பிதழ் அட்டையில் எல்சிடி திரைகள் பொருத்தப்பட்டு இருந்தது, எல்சிடி திரை ஒரு பெட்டியில் இருக்கும், அந்த பேட்டி அவிழ்க்கப்பட்டதும் அதிலிருந்து ஒரு பாடல் ஒலிக்கத் தொடங்கும். இதன்பின்னர் ரெட்டி குடும்பத்தினர் விருந்தினர்களை திருமணத்திற்கு அழைப்பதை அந்த வீடியோ காட்டுகிறது.
திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை வாசலில் இருந்து வரவேற்பு செய்து 40 சொகுசு மாட்டு வண்டிகளில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். பாலிவுட்டின் கலை இயக்குனர்கள் விஜயநகர பாணியிலான கோவில்களின் செட்களை வடிவமைத்துள்ளனர். உணவருந்தும் பகுதி பெல்லாரி கிராமம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. விருந்தினர்களை ஏற்றிச் செல்ல சுமார் 2000 வண்டிகள் மற்றும் 15 ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன. பெங்களூருவில் ஐந்து மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் 1500 அறைகள் விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது, மைதானத்தில் பாதுகாப்பு பணிக்காக 3000 பாதுகாப்புப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டனர்.
ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் அரசர்கள் போல் உடை அணிந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை அணிந்திருந்தனர். திருமண சடங்குகள் சுமார் ஐந்து நாட்கள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. மணப்பெண் ரூ.17 கோடி மதிப்புள்ள காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்திருந்தார், புடவையில் தங்க நூல் நெய்யப்பட்டு இருந்தது. மணப்பெண் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் மற்றும் மணப்பெண்ணுக்காக மும்பையிலிருந்து பிரத்யேகமாக மேக்அப் ஆர்ட்டிஸ்ட் வரவழைக்கப்பட்டு மேக்கப்புக்கு மட்டும் ரூ.30 லட்சம் செலவிடப்பட்டது, சுமார் 50க்கும் மேற்பட்ட மேக்கப் கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கனடாவில் தாக்கப்பட்ட சீக்கிய மாணவர்! தலைப்பாகையைக் கிழித்து அத்துமீறல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ