இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம், இப்ப போய் இப்படியா? வைரலாகும் வீடியோ

Viral Video: சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 15, 2022, 06:51 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம், இப்ப போய் இப்படியா? வைரலாகும் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

உடல் ஆரோக்கியத்துக்காக தினமும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் சில சமயம் சலிப்பும், சோம்பலும் வருவதுண்டு. இன்று ஒரு நாள் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என தோன்றும். ஆனால், அப்படிப்பட்டவர்கள் இந்த வீடியோவை பார்த்தால் உடனடியாக சுறுசுறுப்பு அனைவரையும் பற்றிக்கொள்ளும். 

தனது திருமணத்துக்காக முழுமையாக தயாராகி, கனமான திருமண உடை மற்றும் ஆபரணங்களை அணிந்துள்ள ஒரு பெண், மிகவும் லாவகமாக புஷ்-அப் செய்வதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இது பார்ப்பவர்களை பிரமிப்பூட்டுகின்றது. 

இந்த வீடியோ ட்விட்டரில் பதிவேற்றப்பட்டுள்ளது. ‘லெஹங்கா, நகைகளுடன் ஒரு மணப்பெண் பெய்யும் வித்தியாசமான புஷ்-அப்’ என இதற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | திருமணத்தில் தோழிகள் செய்த வேலையால் தேம்பித் தேம்பி அழுத மணப்பெண் 

மணமகளின் வேற லெவல் வீடியோவை இங்கே காணலாம்: 

வீடியோவில் காணப்படுவது போல, மணப்பெண் தனது திருமண உடை மற்றும் நகைகளை அணிந்து முழுமையாக தயாராக உள்ளார். பின், திடீரென்று அவர் தனது ஃபிட்னஸ் திறமைகளை காட்டத் துவங்குகிறார். கனமான சிவப்பு நிற லெஹங்கா அணிந்து, கனமான நகைகளையும், அணிந்துகொண்டு, அழகு நிலையம் போல் தோற்றமளிக்கும் இடத்தில் அவர் புஷ் அப் செய்யத் தொடங்குகிறாள். 

இந்த வீடியோ 4,700க்கும் மேற்பட்ட வியூஸ்களைப் பெற்றுள்ளது. சில நெட்டிசன்கள் அவரது ஃபிட்னஸை  பாராட்டிய நிலையில், இந்த மணப்பெண் எதற்கு திருமண உடையில் புஷ்-அப் செய்கிறார் என சிலர் வியந்தும் உள்ளனர். சில நெட்டிசன்கள் இதை கிண்டலும் செய்துள்ளனர்.

ஆனால், பல விதங்களில் இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மணப்பெண்கள் தங்கள் திருமணங்களில் நடனமாடுவதை நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். ஆனால், இவ்வளவு கனமான ஆடைகள் மற்றும் நகைகளுடன் ஒரு மணமகள் புஷ் அப் செய்வது அடிக்கடி நடக்கும் விஷயம் அல்ல. 

மேலும் படிக்க | முகத்தில் புன்னகை பூக்கவைக்கும் மணமக்களின் கியூட் சண்டை: வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News