கூச்சப்படாமல் மேடையில் மணமகள் செய்த வேலை: கண் கலங்கிய நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Bride Dance Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் கண் கலங்காமல் இருக்க முடியாது. இந்த கியூட்டான திருமண வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 6, 2023, 01:18 PM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் bridal_lehenga_designn என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
கூச்சப்படாமல் மேடையில் மணமகள் செய்த வேலை: கண் கலங்கிய நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமூக ஊடகங்களில் தினமும் பல வேடிக்கையான திருமண வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசில் இருக்கின்றன. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம். இதுமட்டுமின்றி சில சமயம் மணமகன் மணமகள் இடையில் கடுமையான சண்டை மூள்வதையும், அது கைகலப்பு வரை செல்வதையும் நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். சமீபத்திலும் ஒரு திருமண வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. 

மனதை அள்ளும் வகையில் உள்ள இந்த வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் தனக்கு திருமணம் நடப்பதால் மணமகள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை அவரது நடவடிக்கைகள் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது. அவரது பூரிப்பும் மகிழ்ச்சியும் அவரது முகத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. மணமகன் மீது மணமகளுக்கு உள்ள காதல் அளவுகடந்ததாக இருக்கிறது என்பதை வீடியோவை பார்த்தால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. 

மணமகனுக்காக நடனமாடிய மணமகள் 

வைரலான வீடியோவில், மணமக்கள் அழகான திருமண ஆடை அலங்காரத்துடன் மண மேடையில் இருப்பதைக் காண முடிகின்றது. இருவரது ஜோடியும் மிக அழகாக இருக்கின்றது. மேடையில் மணமகள் தனது வருங்கால கணவருக்காக அழகான நடனம் ஒன்றை ஆடுகிறார். மாப்பிள்ளைக்கு மாலை போடும் முன், அவர் தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் நடனமாடி, பின் அந்த நடன அசைவுகளுடனேயே மாப்பிள்ளைக்கு மாலை அணிவிக்கிறார். மணப்பெண் தன் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்துவதை வீடியோவில் தெளிவாக காண முடிகின்றது. 

மணமகள் தனக்காக அனைவருக்கும் முன் மேடையில் நடனமாடுவதை மணமகன் ஆசையுடன் பார்க்கிறார். அவரும் உணர்ச்சிவசப்படுகிறார். மண்மகள் மாலை அனிவிக்க வசதியாக அவர் முன் மணமகன் குனிந்துகொள்கிறார். இறுதியில், மணமகனும், மணமகளும் ஒன்றாகத் தங்கள் புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கப்போகும் மகிழ்ச்சியில் ஆனந்தமாகப் புன்னகைப்பதைக் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | ’டேய் இப்படி வாங்கடா’ குட்டிகளுக்கு சாலையை சொல்லிக் கொடுக்கும் அம்மா யானை - வைரல் வீடியோ

அழகான மணமகளின் அற்புதமான நடன வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ வைரல் ஆனது, கமெண்டுகளை அள்ளி வீசும் இணையவாசிகள்

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் bridal_lehenga_designn என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

'இப்படிப்பட்ட மனைவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'ப்பா.. என்ன ஒரு அன்பு!!' என மற்றொரு பயனர் வியந்துள்ளார். 'மணமகளின் மகிழ்ச்சி அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிகின்றது' என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். 'இந்த ஜோடி நீண்ட நாட்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என மற்றொருவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் காட்டும் பாசம் இப்படியே நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டும்' என ஒருவர் எழுதியுள்ளார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | சிங்க குட்டிகளை கொஞ்சி விளையாடும் சிம்பன்சி - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News