சிங்க பாய்ச்சலுக்கு சிக்கிய மான் - வைரல் வீடியோ

சிங்கத்தின் சீற்றத்தில் சிக்கிய மானின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2022, 06:41 PM IST
  • சிங்கத்தை வேட்டையாடும் மான்
  • ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட வீடியோ
  • இணையத்தில் வைரலாகியுள்ளது
சிங்க பாய்ச்சலுக்கு சிக்கிய மான் - வைரல் வீடியோ title=

ஆப்பிரிக்க வனப்பகுதியில் சிங்கம் மற்றும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் வேட்டை வீடியோ இணையத்தில் எப்போதும் டிரெண்டாகிக் கொண்டே இருக்கும். வனப்பகுதிக்குள் நடக்கும் உணவுப் போராட்டத்துக்கு மனிதாபிமானம் என்றெல்லாம் ஒன்றை எதிர்பார்க்க முடியாது. புல் உண்ணியான மானை சிங்கங்களும், மான்களும் வேட்டையாடிக் கொண்டே இருக்கும். இது அன்றாட நடக்கும் ஒரு நிகழ்வு. இதில் இருந்து மான்களோ அல்லது மற்ற விலங்குகளோ தப்பிக்க முடியாது. ஒருமுறை தப்பித்தாலும் மறுமுறை சிங்கம் மற்றும் சிறுத்தைகளின் வேட்டையில் சிக்கித் தான் ஆக வேண்டும்.

மேலும் படிக்க | காரில் குத்தாட்டம் போட்ட மணப்பெண், வாய் பிளந்த மணமகன்: வீடியோ வைரல்

இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில் கர்ஜித்துக் கொண்டு உணவுக்காக சுற்றித் திரியும் சிங்கம், ஆவேசமாக உள்ளது. இரை கிடைத்தால் போதும் அல்லது பார்வையில் பட்டால்போதும் அடித்துவிடலாம் என காத்திருந்த சிங்கத்திடம் மான் ஒன்று எதேர்ச்சையாக வந்து மாட்டிக் கொள்கிறது. சிங்கம் விடுமா என்ன? நொடிப்பொழுதில் சீற்றம் கொண்டு அந்த மானை அடித்து உணவாக்குகிறது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வனப்பகுதியில் சென்றிருக்கும் சுற்றுலாப் பயணிகள் சிங்கத்தை பார்த்தவுடன் வியப்பில் வாகனத்தை வரிசையாக நிறுத்தி அதனை பார்த்து மகிழ்கின்றனர். ஆனால், உணவுக்கான தேடுதலில் உக்கிரமான கோபத்தில் இருக்கும் சிங்கம், அந்த வழியாக  வரும் மானை கொடூரமாக வேட்டையாடுகிறது. பார்ப்பதற்கு அந்தக் காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. சிங்கம் வேட்டையாடும் நிகழ்வை நேரடியாக பார்த்த சுற்றுலாப் பயணிகளும் பயத்தின் உச்சத்துக்கு சென்றுவிட்டனர். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | அணிலின் தாகத்தை தீர்த்த மனிதர்! இணையத்தில் வைரலான காட்சி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News