அண்ணன் நடித்த‘சாணிக் காயிதம்’ திரைப்பட போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ்

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே. உட்பட பிரபலமான பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது ஆச்சரியமான தகவலாக இருந்தாலும், அனைவரும் சாணிக் காயிதத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 15, 2020, 10:31 PM IST
  • காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே. உட்பட பிரபலமான பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன்
  • இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார்
  • செல்வராகவன் கதாநாயகனாக களம் இறங்கும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது
அண்ணன் நடித்த‘சாணிக் காயிதம்’ திரைப்பட போஸ்டரை வெளியிட்ட நடிகர் தனுஷ் title=

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே. உட்பட பிரபலமான பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் செல்வராகவன். இளம் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது ஆச்சரியமான தகவலாக இருந்தாலும், அனைவரும் சாணிக் காயிதத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘சாணிக் காயிதம்’ திரைப்படத்தில் செல்வராகவனுக்கு இணையாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இரண்டாவது போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ரத்தக் கறையுடன் கைகளைக் கட்டி தரையில் அமர்ந்திருக்கின்றனர். கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் அவர்களின் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்த போஸ்டரை பார்க்கும் போது, நக்சலைட்கள் தொடர்பான கதையாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

அதிலும், வித்தியாசமான திரைப்படங்களை இயக்கியும், தயாரித்தும் இருக்கும் செல்வராகவன் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதை மேலும் அதிகரிக்கும் விதத்தில் இரண்டாவது போஸ்டர் அமைந்துள்ளது.  

இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘சாணிக் காயிதம்’ திரைப்படத்தில்   செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருமே வித்தியாசமான லுக்கில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

Also Read | தளபதி விஜய் இன் 'மாஸ்டர்' டீசர் படைத்த சாதனை....!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News