'யாரப்பாத்து....?' என கூறி மாஸ்க் அணிய மறுத்த மருத்துவர்: வைரல் ஆன தரமான சம்பவம்

கர்நாடகாவில் ஒரு மருத்துவர் ஒரு மாலில் ஷாப்பிங் செய்யும் போது முகக்கவசம் அணிய மறுத்ததோடு முகக்கவசம் போட்டுக்கொள்ளுமாறு கூறியவர்களையும் விமர்சித்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 19, 2021, 11:16 PM IST
  • கர்நாடகாவிலிருந்து ஒரு வினோதமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
  • முகக்கவசம் அணிய மறுத்தார் மருத்துவர்.
  • அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
'யாரப்பாத்து....?' என கூறி மாஸ்க் அணிய மறுத்த மருத்துவர்: வைரல் ஆன தரமான சம்பவம் title=

பெங்களூரு: கர்நாடகாவிலிருந்து ஒரு வினோதமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு மருத்துவர் ஒரு மாலில் ஷாப்பிங் செய்யும் போது முகக்கவசம் அணிய மறுத்ததோடு முகக்கவசம் போட்டுக்கொள்ளுமாறு கூறியவர்களையும் விமர்சித்துள்ளார் என தெரிய வந்துள்ளது. அந்த சம்பவத்தின் படம் வைரலாகியுள்ளது. 

டாக்டர். ஸ்ரீநிவாஸ் ககிலயா என அடையாளம் காணப்படுள்ள அந்த மருத்துவர் ஒரு மாலில் உள்ள பலசரக்கு கடையில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கட்டுவதற்காக பில் கவுண்டருக்கு வந்தார். அப்போது ஒரு பொது இடத்திற்குள் நுழையும்போது சட்டப்படி முகக்கவசம் அணிய வேண்டும் என்று அவருக்கு நினைவூட்டப்பட்டது.

எனினும், முகக்கவசத்தை (Mask) அணிய மறுத்த அந்த மருத்துவர், இவை, "முட்டாள்தனமான விதிகள்" என்றும் விமர்சித்துள்ளார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கடையின் மேலாளர் அவருக்கு இது சட்டம் என்று நினைவுபடுத்தினார். மற்ற வாடிக்கையாளர்களும் தங்கள் கடை ஊழியர்களும் முகக்கவசங்களை அணிந்திருப்பதையும் மேலாளர் சுட்டிக்காட்டினர்.

ALSO READ: அதிசயம் ஆனால் உண்மை! கிட்டத்தட்ட 5 கோடியை விட்டுக் கொடுத்த மருத்துவர்

மருத்துவரால் (Doctor) அங்குள்ள அனைவருக்கும் ஆபத்து உள்ளது என மேலாளர் கூறியதற்கு, தனக்கு ஏற்கனவே கோவிட் வந்துவிட்டதாகவும், அதனால், தன்னால் யாருக்கும் தொற்று பரவ வாய்பில்லை எனவும் அந்த மருத்துவர் வாதிட்டார்.

இந்த முழு சம்பவமும் கடையின் பாதுகாப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்த மற்ற வாடிக்கையாளர்களும் அவரை அதற்காக வற்புறுத்தினர். ஆனால் அவர் எதற்கும் செவி சாய்க்கவில்லை. 

மேலாளரிடமிருந்து எழுத்துப்பூர்வ புகாரைப் பெற்ற பின்னர் கர்நாடக காவல்துறை தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குத் பதிவு செய்துள்ளது. மருத்துவரின் நடவடிக்கைகள் தனக்கும், தனது ஊழியர்களுக்கும் பிற வாடிக்கையாளர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் படி இருந்ததாக கடை மேலாளர் கூறியுள்ளார். 

மருத்துவருக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் இடையில் நடந்த உச்சகட்ட உரையாடல் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதற்கிடையில், கர்நாடகாவில் ஒரு நாள் கொரோனா தொற்றின் (Coronavirus) அளவு 34281 ஆக பதிவாகியுள்ளது. 24 மணி நேரத்தில் 49953 பெர் தொற்றிலிருந்து குணமடைந்ததாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை இன்று மிக அதிகமாக இருந்தது. இன்று கர்நாடகாவில் தொற்றால் பாதிக்கப்பட்ட 468 பேர் இறந்தனர். அங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,06,655 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 23,306 ஆகவும் உள்ளது.

ALSO READ: Bizarre! 2 சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த மணமகனுக்கு மாமியார் வீட்டில் களி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News