சண்டைக்கு குறுக்கே வந்த டிரைவரை ஆட்டோவுடன் தலைகீழாக கவிழ்த்த மாடுகள் வீடியோ வைரல்

சாலையில் சண்டைப்போட்டுக் கொண்டு மாடுகள் இரண்டு இருக்கும்போது அதனை தடுக்க குறுக்கே சென்ற ஆட்டோவை மாடுகள் தலைகீழாக புரட்டிபோட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 18, 2023, 01:56 PM IST
  • மாடுகள் இரண்டு மோதல்
  • தடுக்க வந்த ஆட்டோ
  • தலைகீழா கவிழ்த்த மாடுகள்
சண்டைக்கு குறுக்கே வந்த டிரைவரை ஆட்டோவுடன் தலைகீழாக கவிழ்த்த மாடுகள் வீடியோ வைரல் title=

கோபம் யாருக்கு தான் இருக்காது? பிஞ்சு குழந்தைகள் முதல் தாத்தா வரை வரும் கோபத்தை பார்த்த பலரும் விலங்குகளுக்கு வரும் கோபத்தையும், அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் சொற்ப அளவிலேயே பார்த்திருப்பார்கள். வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, நாய், கோழி, பூனை மற்றும் மாடுகளை நீங்கள் சீண்டிப் பாருங்கள், அப்போது தெரியும் அது என்ன செய்யும் என்று. முடிந்தளவுக்கு பொறுமையாக இருக்கும், பயந்து ஓடும். ஆனால் அதன் எல்லையை கடக்கும் வரை அந்த ரியாக்ஷன் எல்லாம், அதன்பிறகு உங்களை அந்த விலங்குகள் பதம் பார்த்துவிடும். அதனை புரிந்து கொண்டிருந்தால் பத்திரமாக இருக்கலாம், இல்லையென்று கடி, மிதியெல்லாம் வாங்குவதை தவிர்க்க முடியாது. 

மேலும் படிக்க | நண்பரை காப்பாற்ற போராடாடும் நரி... இறுக்கிப் பிடித்த மலைப்பாம்பு - வைரலாகும் சண்டை காட்சி!

ஏனென்றால் விலங்குகளுக்கு ஆறறிவு எல்லாம் கிடையாது. நேர் நிதானம் இல்லாமல் எல்லாத்தையும் செய்துவிடும். பின்விளைவுகளுக்கு நீங்கள் தான் மிகப்பெரிய விளைவுகளை கொடுக்க வேண்டியிருக்கும். இப்போது வைரலாயிருக்கும் வீடியோவும் அந்த ரகம் தான். ஆனால், இந்த வீடியோவில் விலங்குகளின் கோபத்துக்கு ஆளாகும் ஓட்டுநரின்நோக்கத்தை எந்ந விதத்திலும் குறை சொல்ல முடியாது. அவர் சாலையில் செல்லும்போது இரண்டு மாடுகள் ஆக்ரோஷமாக சாலையின் குறுக்கே சண்டைப்போட்டுக் கொண்டிருந்தன. யாரும் அந்த மாடுகளை விலக்க முற்படவில்லை. மாடுகளின் சண்டையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் நல்ல நோக்கத்தோடு ஆட்டோவை மாடுகளுக்கு இடையே விட்டு சண்டையை விலக்க முயற்சி செய்கிறார் அந்த ஆட்டோ ஒட்டுநர்.

அவரின் முதல் முயற்சி வெற்றி கிடைக்கிறது. அதாவது சண்டைப் போட்டுக் கொண்டிருந்த மாடுகள் இரண்டும் தனித்தனியே செல்கின்றன. அப்பாடா, சண்டை இனி இல்லை என நினைக்கிற சமயத்தில் கிளைமேக்ஸில் ஒரு டிவிஸ்ட் நடக்கிறது. பிரிந்துபோன ஒரு மாடு அந்த ஆக்ரோஷத்தை எங்கு காட்டுவது என தெரியாமல், சண்டையில் இருந்து விலக்கிய ஆட்டோ மீதே காட்டுகிறது. வேகமாக ஓடி வந்து தன்னை இடித்து விலக்கிய ஆட்டோவை, ஓட்டுநர் உள்ளிருக்கும்போதே தலைகீழே தள்ளிவிடுகிறது. இதில் தப்பித்தால்போதும் என ஆட்டோவில் இருந்து வெளியேறுகிறார் ஓட்டுநர். இந்த வீடியோ தான் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. 

மேலும் படிக்க | சிறு வயதை நினைப்படுத்தும் யானைக்குட்டிகளின் சண்டை வீடியோ! மனம் மயக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News