‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ திரைப்படத்தின் கவர்ச்சி trailer!

‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Oct 19, 2018, 11:41 AM IST
‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ திரைப்படத்தின் கவர்ச்சி trailer! title=

‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

கன்னட திரையுலகில் 40 திரைப்படத்திற்கும் மேல் கதாநாயகியாக நடித்த சர்மிளா மாண்ரே தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் திரைப்படம் ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’. சாய் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் சர்மிளா மாண்ரே, R.சாவண்ட் இருவரும் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல் ராஜா ஆகியோருடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

இயக்குநர் A.R.முகேஷ் இப்படத்தினை இயக்குகின்றார். இவர் தமிழில் ‘இன்று முதல்’, ‘ஆயுதம்’ ஆகிய படங்களையும் கன்னடத்தில் ‘சஜினி’ ஆகிய படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தினை கோபி ஒளிப்பதிவு செய்கின்றார். இசை பொருப்பினை நட்ராஜ் சங்கரன் ஏற்கின்றார். 

இரண்டு கட்டங்களாக நடைப்பெற்ற இப்படத்தின் படப்படிப்புகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் திரைப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

Trending News