செவ்வாய்க்கிழமை இரவு சித்ராவுக்கு நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்!

பிரபல தொலைக்காட்சி நடிகை சித்ரா புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்ககொண்டார். அவரது மரணம் ரசிகர்களையும் அவரது நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 10, 2020, 01:34 PM IST
செவ்வாய்க்கிழமை இரவு சித்ராவுக்கு நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்!

சென்னை: பிரபல தொலைக்காட்சி சின்னத்திரை நடிகை சித்ரா புதன்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்ககொண்டார். அவரது மரணம் ரசிகர்களையும் அவரது நண்பர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேற்று அதிகாலை சின்னத்திரை நடிகை சித்ரா (Actress chitraதான் தங்கியிருந்த ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருடன் ஹேமந்த் என்பவர் இருந்தார் என்பதும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் விசாரணையில் ஏற்கனவே தாங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் செய்துவிட்டதாக விசாரணையில் ஹேமந்த் (Hemanth Kumarகூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

ALSO READ | சித்ரா மரணம்! போலீஸில் ஹேம்நாத் கூறிய திடுக் தகவல்!

இதற்கிடையில் சித்ராவின் உடல் இன்று காலை 10 மணிக்கு பிரேத பரிசோதனை செய்ய இருப்பதாகவும் இந்தப் பிரேத பரிசோதனையின் முடிவில் சித்ராவின் மரணத்தின் மர்மங்கள் விலகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது செவ்வாய்க்கிழமை இரவு சித்ராவுக்கு நடந்தது என்ன என்று அவரது நண்பர் நடிகை சரண்யா தகவல் ஒன்று வெளியிட்டுள்ளார். வழக்கமாக தனது படப்பிடிப்பின் போது குறைந்தது பத்து புகைப்படங்களையாவது படம்பிடித்து போஸ்ட் செய்யும் சித்ரா செவ்வாய்க்கிழமை இரவு அதை செய்யவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

ALSO READ | Instagram இல் வைரலாகும் நடிகர் சித்ராவின் கடைசி வீடியோ!

சித்ரா சம்பந்தப்பட்ட இரண்டு பேக் டு பேக் ஷூட்கள்  (Serial shootingஇருந்தது, அதில் ஒன்று இரவு 7 மணிக்கு முடிவடைந்தன, மற்றொன்று காலை 12 மணிக்கு முடிந்தது. அவரது கோஸ்டார் படி சித்ரா தொடர்ந்து தொலைபேசியில் இருந்தார் மற்றும் ஒருவித தீவிர உரையாடலில் மூழ்கியிருப்பதாகத் தோன்றியது என்றார். 

More Stories

Trending News