முரட்டு சிங்கிளா நீங்கள்?... பயன்பாட்டிற்கு வந்தது Facebook Dating!

Facebook நிறுவனத்தின் ப்ரத்தியேக டேட்டிங் அம்சமான Facebook Dating தற்போது சிங்கப்பூரில் பயன்பான்டிற்கு வந்துள்ளது!

Updated: May 2, 2019, 08:13 PM IST
முரட்டு சிங்கிளா நீங்கள்?... பயன்பாட்டிற்கு வந்தது Facebook Dating!
Representational Image

Facebook நிறுவனத்தின் ப்ரத்தியேக டேட்டிங் அம்சமான Facebook Dating தற்போது சிங்கப்பூரில் பயன்பான்டிற்கு வந்துள்ளது!

டேட்டிங்க் எனப்படும் குறைகால காதலர்களை தேடும் செயலுக்கு உலக அளவில் பல அமோக வலைதளங்கள் இயங்கி வருகின்றது. குறிப்பாக டின்டர், பம்பல் போன்றவை இதற்காகவே தனித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனினும் இந்த வலைதளங்களில் நுழைய பேஸ்புக்கின் கணக்கு தேவைப்படுகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனமே டேட்டிங் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.

முதன் முறையாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சோதனை முறையில் கொலம்பியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, இதே டேட்டிங் சேவையை கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் சோதனை முறையில் பேஸ்புக் நிறுவனம் வழங்கியது. இந்நிலையில் தற்போது சிங்கபூர் நாட்டிலும் இந்த பேஸ்புக் டேட்டிங் சேவையினை அறிமுகம் செய்துள்ளது பேஸ்புக்.

இதன் மூலம் தற்போது சிங்கப்பூர் உள்ளிட்ட 19 நாடுகளில் பேஸ்புக் டேட்டிங் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த பேஸ்புக் டேட்டிங் சேவை மூலம், பேஸ்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் உரையாடவும், தங்களுக்கான ஜோடிகளை தேர்வு செய்யவும் முடியும். இந்த சேவை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். 

மற்ற செயலிகளை போல் டேட்டிங்கு என தனி செயலி இல்லாமல் பேஸ்புக் கணக்கில் இருந்து டேட்டிங் வசதியை பயன்படுத்த இயலும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. எனினும் பேஸ்புக் டேட்டிக் கணக்கினை குறித்த தகவல்கள் எதுவும் பேஸ்புக் நண்பர்களுக்கு காட்டப்படாது எனவும், பயனரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற டேட்ங்க் செயலியை போல் தற்காலிக காதலியை வழங்குவது என்ற நோக்கத்துடன் செயல்படாமல், பேஸ்புக் டேட்டிங் செயலி நிரந்திர காதலியை தேர்ந்தெடுத்து வழங்க வழி வகுப்பதாக பயனர்கள் கருத்துகளை பதிவு செய்கின்றனர்.

இந்த அம்சம் விரைவில் இந்தியா வந்தால், சிங்கிளாக திரியும் 90-ஸ் கிட்ஸ்களுக்கு நன்மையாக அமையும்... !