தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘பட்டாஸ்’ திரைப்பட First Look வெளியானது!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள பட்டாஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Updated: Jul 28, 2019, 07:36 PM IST
தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘பட்டாஸ்’ திரைப்பட First Look வெளியானது!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள பட்டாஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

கொடி பட இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கின்றார். புதுப்பேட்டை திரைப்படத்திற்கு பின்னர் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் இதுவாகும்.

இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கை கோர்த்துள்ளனர். ஒரசாத பாடல் புகழ் விவேக் - மெர்வின் இசையில் இந்த திரைப்படத்தை சத்யஜோதி ப்ளிம்ஸ் தயாரிக்கின்றது.

இந்நிலையில் இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.  ‘பட்டாஸ்’ என்ற டைட்டிலுடன் வெளியாகியிருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் நடிகர் தனுஷின் பெயர் இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தோன்றும் என்றும் கூறப்படுகிறது. 

இது ஒரு புறமிருக்க ‘பட்டாஸ்’  படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய், தனுஷின் படங்கள் நேரடியாக மோதும் சூழ்நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.