நான்கு காதுகளுடன் பிறந்த பூனை; வைரலாகும் வீடியோ

மிடாஸ் ஒரு விளையாட்டுத்தனமான, குறும்புத்தனமான பூனை 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 23, 2021, 04:20 PM IST
நான்கு காதுகளுடன் பிறந்த பூனை; வைரலாகும் வீடியோ title=

 புதுடெல்லி: இந்த உலகில் பல விஷயங்கள் மிகவும் அரிதானவை, அவை நாம் பார்க்கும் போது வியப்படைகிறோம். அத்தகைய தனித்துவமான பூனையை பற்றி நாம் இங்கே காண உள்ளோம். இந்த பூனை சமூக ஊடகங்களில் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஆம், இந்த அழகான பூனை நான்கு (Animal Video) காதுகளுடன் பிறந்துள்ளது. இந்த அதிசய பூனையின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மரபணு மாற்றத்தின் காரணமாக நான்கு காதுகளுடன் பிறந்த பூனையின் படங்களை அதன் உரிமையாளர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

ALSO READ: Viral Snakes: ஒற்றை மரத்தில் மூன்று நாகங்கள்! இணையத்தில் வைரலாகும் முப்பாம்புகள்!! 

கடந்த ஜூலை 14ஆம் தேதி அன்று துருக்கி நாட்டில் இந்தப் பூனை பிறந்தது. பிறந்து நான்கு மாதங்களே இந்த பூனைக்கு மிடாஸ் என அதன் உரிமையாளர் பெயர் வைத்தார். தற்போது மிகவும் ட்ரெண்ட் ஆக இருக்கும் இந்த பூனைக்கு தனி இன்ஸ்டகிராம் கணக்கு தொடங்கி சுமார் 102K பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

இந்தப் பூனைக்கு மரபணு மாற்றம் நிகழ்ந்து கூடுதலாக இரண்டு காதுகள் முளைத்துள்ளன. இதுமட்டுமல்லாமல், இந்தப் பூனையின் வயிற்றில் இதயம் போன்ற வடிவமைப்பில் வெள்ளை முடிகளும் உள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மிடாஸ் ஒரு விளையாட்டுத்தனமான, குறும்புத்தனமான பூனை என்று அதன் உரிமையாளர் கேனிஸ் கூறுகிறார். மேலும், மிடாஸ் பகல் நேரம் முழுவதும் தூங்குவதாகவும், இரவு நேரம் முழுவதும் விழித்திருப்பதாகவும் கூறுகிறார். மிடாஸ் பூனை தனது உரிமையாளர் மடியில் தூங்க அதிக விரும்புவதாக அவர் கூறினார்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

கேனிஸுக்கு சொந்தமான தோட்டத்தில் ஒரு பூனை ஏழு குட்டிகளை ஈன்றுள்ளது. இதில் நான்கு காதுகளுடன் பிறந்த மிடாஸை மட்டும் அவர் வீட்டுக்கு அழைத்து வந்து வளர்க்கிறார். தற்போது இந்த பூனைக்குட்டியின் வீடியோ (Viral Video) இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:Viral Video: காயமடைந்தாலும் எஸ்கலேட்டரில் ஏறி மாஸ் காட்டும் மான் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News