புயலின்போது மக்கள் என்னென்ன செய்யவேண்டும்: விழிப்புணர்வு Video

புயல், சூறாவளியின் போது பொதுமக்கள் என்னென்ன செய்யவேண்டும் என தமிழக அரசு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 15, 2018, 10:35 AM IST
புயலின்போது மக்கள் என்னென்ன செய்யவேண்டும்: விழிப்புணர்வு Video title=

புயல், சூறாவளியின் போது பொதுமக்கள் என்னென்ன செய்யவேண்டும் என தமிழக அரசு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது....! 

நாகை மற்றும் சென்னையில் இருந்து 370 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயலானது, இன்று மாலை அல்லது இரவில் நாகை அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று காலை 8.30 மணிக்கு வெளியிட்டுள்ல வானிலை அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் கஜா புயலானது, மேற்கு-தென்மேற்கு திசையில் மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, அதிகாலை 5.30 மணிக்கு நாகையில் இருந்து கிழக்கு-வடகிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 370 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிககன மழை பெய்யும் என்றும், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில், ஆங்காங்கே, 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான அளவில் அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புயல், சூறாவளியின் போது பொதுமக்கள் என்னென்ன செய்யவேண்டும் என தமிழக அரசு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது....! 

 

Trending News