கே.ஜி.எஃப் பாடலுக்கு நடனம் ஆடிய 5 பெண்கள் - வைரலாகும் வீடியோ

இண்டர்நெட்டில் மிகவும் வைரலாகி வரும் 5 பெண்கள் நடமாடிய காணொளி.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Apr 15, 2019, 04:34 PM IST
கே.ஜி.எஃப் பாடலுக்கு நடனம் ஆடிய 5 பெண்கள் - வைரலாகும் வீடியோ
Pic Courtesy : Youtube Grab

புது தில்லி: தென்னிந்திய படமான 'கே.ஜி.எஃப்' கடந்த ஆண்டு ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக அதன் இந்தி பதிப்பு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. இந்த படத்தை பாலிவுட் ரசிகர்களும் ரசித்தார்கள். இந்த படத்தின் இரண்டாவது அத்தியாயத்திற்கு காத்திருக்கிறார்கள். 

அதே நேரத்தில், இந்த படத்தின் இந்தி பதிப்பில் இடப்பெற்ற 'களி களி' பாடல் மக்களிடையே பிரபலமடைந்தது. இன்றும் இந்த பாடல் இணையத்தில் அதிக அளவில் பார்க்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், இந்த பாடல் மீது உள்ள ஈர்ப்பால் பலர் இந்த பாடலுக்கு நடனம் ஆடி, தங்கள் நடன வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர்.

அப்படி பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோ இண்டர்நெட்டில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஒரு BOM குழு என்ற பெயரில் YouTube சேனலில் பதிவேற்றியது. இந்த வீடியோவில் 5 பெண்கள் நடனமாடுகிறார்கள். இந்த வீடியோ இதுவரை 2 லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்களை பார்த்துள்ளனர். அதேநேரத்தில் கணிசமான எதிர்வினைகளையும் பெற்றுள்ளது. 

வீடியோ: